அற்ககோல்
சொற்ப வாழ்வையும் கரைக்கும்
விஷ நீர்!
வாலிப மயக்கங்களுக்காக
போர்த்தப்படும் மேலாடை!
தரை தொட்ட வியர்வை உலர முன்னர்
உடல் உருக்குலைக்கும் அக்கினி!
வெறும் வயிறை வேக வைத்து
உயிருக்குள் விசம் தடவும் போதை!
உறவுகள் அறுந்து போக- சோக
வரவுகளை ஆட்சேர்க்கும் ஒப்பந்தம்!
ஒவ்வொரு நிச்சயமற்ற விடியலுக்குள்ளும்
தள்ளி விடும் மரண ஒத்திகை!
வாழ்வை மயானமாக்க
இதோ சொகுசுப் பயணம்!
- Jancy Caffoor-
09.04.2013
2013/04/10
இழப்பு
வாழ்க்கை ஓர் ஜெயில் போல்தான். நாம் வரைந்திருக்கும் ஒருசில கட்டங்களை விட்டும் நகர முடியாது. ஆனாலும் நம்மையுமீறி ஒவ்வொரு நிமிடங்களிலும் ஏதோ ஒன்று நடந்து கொண்டுதானிருக்கின்றது. துன்பங்களும் இன்பங்களும் இழப்புக்களும்..........கோபங்களும்!
இந்த உணர்ச்சிகளை கொஞ்சம் ஆற விட்டு மறுநாள் யோசித்துப் பார்த்தோமானால், நேற்றிருந்த கொந்தளிப்பான மனநிலை இன்றைக்கு இருப்பதில்லை. இதுதான் நம் மனதின் போக்கு. அற்பமான இந்த வாழ்க்கையில யாரும் யாருக்கும் எதிரியில்லை. தவறுகளை மறந்து மன்னித்து வாழுவோம்.
ஒவ்வொரு இழப்பும் இன்னுமொரு வெகுமதிக்கான முன்னறிவிப்பு.......! நேற்றைய இழப்பு தந்த மன வைராக்கியத்தில், இன்று எதிர்பாராத வெகுமதி நிச்சயம் கிடைக்கும். ஆனால் நாம்தான் காத்திருப்பதில்லை.
அதனால நாம் வேதனைப்படுகின்றோம். யோசித்து பார்த்தால் இந்த வேதனை கூட முட்டாள்தனம்தான். நமக்கு சரியானது அடுத்தவருக்கு பிழையாக இருக்கலாம். நமக்கு பிடித்தது இன்னுமொருவருக்கு பிடிக்காமலும் போகலாம். வாழ்க்கை எனும் சநநிதியில் யார் யாருடனோ.............எல்லாம் இறை நாட்டமே!
ஊனம்
இருள் மெல்ல கவிழ ஆரம்பிக்கின்றது இந்நேரம்....
மாலை 5.20.......
காற்றில் சலங்கையை உதிர்த்துக் கொண்டிருந்தன பறவைகள். வீட்டு முன்றலில் அகலமாய் தன் தோள் பரப்பிக் கொண்டிருந்த வேப்ப மரக் கொப்பிலிருந்தவாறு குயிலொன்று இனிமையாய் கூவிக் கொண்டிருந்தது. முருங்கை மர சின்னஞ் சிறு இலை இடுக்கின் வழியாக அணில் இரண்டு ஓடிப் பிடித்துக் கொண்டிருந்தன. முந்தநாள் எட்டிப் பார்த்த ரோசாப் பூவொன்று காற்றின் மிரட்டலில் தன் இதழ்களை உதிர்த்துக் கொண்டிருந்தது.
இயற்கையின் அழகை தரிசித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைய எத்தனிக்கின்றேன். வீதியில் தென்பட்ட காட்சியொன்று மனதை சுண்டியிழுக்கின்றது.
"ஆரோக்கியமான அழகான கணவனொருவன், தன் கால் ஊனமான மனைவியை கையில் ஏந்தியாவாறு நடந்து கொண்டிருந்தான். என் கண்கள் பனித்தன. இவ்வுலகில் அன்பை மட்டும் யாசிக்கின்ற, ஆண்களும் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது மனசு அவர்களுக்காக பெருமிதப்படுகின்றது,
"மன ஊனத்தை விட கால் ஊனம் ஒன்றும் பெரிய விடயமில்லை" என்பதைப் போல் அந்த சகோதரியும் அவரிடமுள்ள தன்னம்பிக்கையின் சில துளிகளை என்னுள் விட்டுச் செல்கின்றார்................
"நான் இனி எதற்கும் அழப்போவதில்லை"
மனம் லேசாக , புதுப்பிறவி எடுத்தாற்போல வீட்டினுள் நுழைகின்றேன்.............
தீ
வெற்றிடத்தை நிரப்பும் காற்றாய்
விருட்டென்று நுழைகின்றாய் என்னுள்!
மிரட்டுமென் தனிமை கொஞ்சம் விரண்டோட.........
கொட்டும் மழையில் மேனி கரைந்துன்னுள் வழிய
வெட்டும் மின்னலாய் முட்டுமுன் புன்னகையில்
கட்டிப் போடுகின்றாய் என் மனதை மெல்ல!
தவிப்பின் தணலில் மெழுகாய் நம்மேனி கரைய- உன்
வகிடெடுக்கும் விரலால் கீறி என் நாணம் கிழிக்க........
அடடா..........
மோகம் கிளர்ந்தெழுந்து சாரலாய் நம்முள் கசிய
காமம் வனைந்து கொள்கின்றது நம் காதலை!
Subscribe to:
Posts (Atom)