About Me

2013/04/29

கணனியும் நானும்



என் மடிக் கணனியில்
சாப்ட்வெயராய் நுழைந்தாய்!

மௌசாய் என் தொப்புள் நாண்
உனை ஸ்பரிசிக்கையில்
மெல்ல எட்டி உதைத்தாய்!

கீபோர்டாகி என் உணர்வுகளை உனக்குள்
பதியமிடுகின்றேன் தினமும்!

என் கருவறை சிஸ்டத்தில் சேமிக்கின்றேன்
உன்னை வைரசுக்கள் தாக்காமலிருக்க

என் கனவு மொனிட்டரில்
உன் முகம் ரசித்தே களித்தேன்!

என் பிரசவ ப்ரிண்டரில் வெளியுலகிற்காய்
உனை அச்சேற்றும் நாள் எப்போது!

- Jancy Caffoor-
     28.04.2013

விதியின் வழியில்


தூக்கம் மறந்த இரவுகளில் இனி
தூளியாய் தரித்திருக்கும் ஏக்கம்!

பசுஞ் சோலைகளில் பாய் விரித்த தென்றல்
வங்கம் தேடி மறைந்திருக்கும்!

ஹிருதயச் சிறகடிப்பில் கிறங்கிய மனம்
சந்தத் துடிப்புக்களை நிறுத்திட விழையும்!

பாலைவெளிகளில் பாகாய் உருகும் நிஜம்
சோலைக் கனவுகளை கரைத்திட்டு மறையும்!

நீயும் நானும் ஈர் சமாந்திரங்களாய்
நீர்த்திரை விழி மறைக்க பயணிப்போம்!

இழப்புக்கள் வசந்தங்களைத் திரையிட
பாழாய்ப் போன விதியைச் சபித்தபடி நான்!

- Jancy Caffoor-
     28.04.2013

என்றோ ஒரு நாள்


என்றோ ஒர் நாள்
உரமொன்று உயிர் வழியாய் நழுவிச் சென்றதில்
தவறுதலாய்
களைகள்
கலை வடிவத்தில் என் தேசத்தில்!

தலையறுக்கும் வெறியோடு - என்
குரல்வளை நசுக்க அவை துடிக்கையில்
மிரட்சியோடு ஓடுகின்றேன்
திக்கேதுமறியாமலே!

முட்களுக்கிடையியே
மென் மலரொன்று அணைத்து நிற்கின்றது
மனசோரம்

"நான் உனக்கிருக்கேன்"

- Jancy Caffoor-
     28.04.2013

வண்ணாத்தி



இரவொன்றில்...........!

சிறகடித்து பறந்து வந்த வண்ணாத்திப்பூச்சியொன்று தவறுதலாய் என்னறைக்குள் நுழைந்தது...

அதன் பரபரப்பில் என் உறக்கம் அறுந்தது. அடித்து விரட்ட ஆவேசம் கொண்டபோதும் , என்னிடம் சிக்காமல் ஜாலியாய் அறையை நோட்டம் விட்டு பறந்து கொண்டே இருந்தது, நானோ அதனுடன் போராடித் தோற்ற நிலையில் களைத்துறங்கினேன் வண்ணாத்திப்பூச்சியை வெளியே விரட்ட முடியாதவளாய்....!

ஆழ்ந்த உறக்கத்தில் வண்ணாத்திப்பூச்சி மறந்தே போக,
எழுகின்றேன் ஏதுமறியாதவளாய் அதிகாலையில்........

கண்ணெதிரே சிறகிரண்டு பிய்ந்து தரையில் சிதறிக் கிடக்க, பதற்றத்துடன் வண்ணாத்தியைத் தேடுகின்றேன்.

நேற்று சபித்த நான், இன்றோ வேதனையுடன் அச்சிற்றுயிரைத் தேடுபவளாய்.......

நச்....நச்....

பல்லியொன்றின் சப்தம் உரப்போடு என்னருகில் கேட்க,

அறைச் சுவற்றை உற்று நோக்குகின்றேன்...

வண்ணாத்தியின் சுதந்திரம், பல்லியின் இரையாகிக் கொண்டிருந்தது..

"எப்போதும் ஆபத்துக்கள் எம்மை நெருங்கிக் கொண்டுதானிருக்கின்றன. தவிர்ப்பதும், சிக்குவதும் நம் மதி, விதி வசப்பட்டது.