About Me

2014/07/28

நிலா மோனா - 5



உறவுகள் புரிந்துகொள்ளப்படாதபோது....
உண்மை அன்பு, ஊமைவலிக்குள் தன்னைச் சுருட்டிக் கொள்கின்றது!

அரவணைப்பும், பிரிவும் தீர்மானிக்கப்படுவது தலைவிதியாலல்ல..

அவரவர் மாற்றிக்கொள்ள விரும்பாத முரண்பாட்டுச் சிக்கலால்தான்

----------------------------------------------------------------------------------


மேகங்கள் தீண்டா நிலாப்பெண் நானடா...
இருந்தும்....
உன் ........
விரல்கள் தீண்டும் கவிதையாய்
பிறப்பெடுக்கின்றேன்  உன் ஞாபகத்துள் நசிந்தபடி!

---------------------------------------------------------------------------------


காலம் என்பது அழகான காற்றாடி போன்றது!
காலத்தை உரிய விதத்தில் பயன்படுத்துபவனால் மாத்திரமே , அதனை உரிய திசைக்கு வழிப்படுத்த முடியும்!

-----------------------------------------------------------------------------------


தோல்வி என்பது அனுபவங்கள் பெற்றுத் தரும் களமேடை..........

எனவே ........

தோல்வியற்ற வாழ்வு கிடைக்கும்போது நாம் நம் அனுபவங்களை இழந்து விடுகின்றோம்......

----------------------------------------------------------------------------------


இன்பம், துன்பம், ஏக்கம், எதிர்பா்ப்பு,ஏமாற்றம், அன்பு, பாசம், காதல், தோல்வி, இலட்சியம் போன்ற எண்ண வார்ப்புக்களின் கலவைதான் வாழ்க்கை....

இந்த உண்மையை உள்வாங்கும்போது,  நாமும் இயல்பாய், சுவாரஸியமாய் நம் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முடிகின்றது!


வௌிநாட்டு வாழ்க்கை




வௌிநாட்டு வாழ்க்கை என்பது .........

சிலருக்கு ஒரு மோகம்!
சிலருக்கு கஷ்டத்தை தீர்க்கும் வழி!
சிலருக்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்!
சிலருக்கு உறவுகளின் அழைப்பாணை!
சிலருக்ேகா எதிர்கால முன்னேற்றம்!

காரணம் எதுவாக இருந்தாலும் கூட......

பலருக்கு தன் தாய் மண்ணில் கிடைக்கும் சுகமும், கௌரவமும், இன சன உறவுகளின் பாசமும் , மனநிம்மதியும் கிடைப்பதில்லை என்பதே உண்மையான நியதியாகும்!

வௌியே ஆடம்பர வாழ்க்கையை ரசிப்பதாக அனுபவிப்பதாக காட்டிக் கொண்டாலும்கூட ........

மனித மனம் இரகஸியமாய் அன்புக்கும் , அமைதிக்கும் சதா ஏங்கிக் கொண்டே இருக்கின்றது.

அழகாக இருக்கும் வெங்காயம் உரிக்க உரிக்க கண்ணீர் தருவதைப் போலவே, இவ் வௌிநாட்டு மோகமும் கடைசியில் கண்ணீரில் கரைந்து நிற்கின்றது என்பதே உண்மை!

நிலா மோனா - 4



என் காலடிச்சுவடு - உன்
வாழ்க்கைப் பாதையில்!

நீயோ....

விரைந்தோடுகின்றாய்....
என்னைத் தனிமையில் வீழ்த்தி!
------------------------------------------------------------------------------------


தம் செயற்பாடுகளால் சிலர் உணர்த்தும் மாற்றங்களை நாம் உள்வாங்கும்போது.........

காலப்போக்கில் அம்மாற்றங்களை சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்கின்றோம்!

இதுதான் வாழ்க்கை.......

எனும் உளப்பக்குவம் தரும் அமைதி நம் எதிர்கால நாட்களுக்கான சிறந்த உரமாக மாறி விடுகின்றது!
-------------------------------------------------------------------------------------


ஒருவர் மீதான நம்பிக்கை உடையும்போது, அவர் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்புக்களும் தானாக மறைந்து விடுகின்றது....

------------------------------------------------------------------------------------


புன்னகை மூலமாக வௌிப்படுத்தப்படும் அன்பினை கால மாற்றங்கள் சேதப்படுத்துவில்லை....

உண்மையான உள்ளத்தின் அன்பினை வௌிப்படுத்தும் குறிகாட்டியாய் புன்னகை அமைந்து விடுகின்றது!



நிலா மோனா - 3



அன்பென்பது கொடுக்கல் வாங்கல்தான்....
இதயங்களின் மனப்பூர்வமான உணர்வேற்றம்!

ஆனால்....

பலர் அதனை தக்க வைப்பதில் தவறிவிடுகின்றனர்...
முரண்பாடுகளின் கைத்தாளத்தில் சிதறிவிடும் அன்பை மீளப் பெற்றுக் கொள்ள போராட வேண்டியிரிக்கின்றது!
---------------------------------------------------------------------------------------


எதிர்பார்ப்புக்கள்தான் ஏமாற்றங்களின் விளைச்சல் நிலம்!
ஏமாற்றங்களின் தடுமாற்றம் - நம்
வாழ்வின் ஏற்றங்களையே வேரறுத்துவிடும்!
--------------------------------------------------------------------------------------


உன்னைச் சுற்றும் பூமியாய்
நான்!

நீயோ.......

உன் ஈர்ப்புவிசையை உடைத்து
விண் சுற்ற வைக்கின்றாய் - உன்
தேசம் துறக்கும் அகதியாய்!

-------------------------------------------------------------------------------


துன்பம் வரும்போது நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள்

"இயற்கை"!

அதனால்தான்...........

இதயத்தை இயற்கையால் நிரப்பி மனதை அமைதிப்படுத்தும்போது துன்பமும் காணாமல் ஓடிவிடுகின்றது!