2014/07/28
உன் முத்தத்தில்
உன்னை நானும்....
என்னை நீயும்.....
மனதில் சுமந்து
மகிழ்ச்சியாய் மணிக்கணக்காய் பேசுகின்றோம்!
என்ன பேசுகின்றோம்
எதுவுமே புரியவில்லை...
இருந்தும்.....
பேச்சை நிறுத்தும்போதல்லவா - என்
சுவாச மூச்சு திணறுகின்றது!
----------------------------------------------------------------------------------------
நாம் மௌனிக்கும்போதெல்லாம்
உரத்துப் பேசி விடுகின்றது நம் முத்தம்!
நாம் சண்டையிடும் போதெல்லாம்
நம்மை அமைதிப்படுத்தி விடுகின்றது நம் முத்தம்!
முத்தங்களின் தித்திப்புக்கூட
காதலுக்குச் சுவைதானோ என் அன்பே!
---------------------------------------------------------------------------------------
காதல்......!
நம்மை ஸ்பரித்துச் செல்லும்போதெல்லாம்....
கூடலும்.....
ஊடலும்.....
நம் விதி நெய்யும்
ஆயுள் ரேகையாய்!
என்னவனே...
அன்பை உன்னிடம்தானே கற்றுக் கொண்டேன்...!
காற்றும் நுழையா நம் நெருக்கத்தின்
சாட்சியாய் என்றும் நம் நினைவுகள்!
திகட்டா உறவாகி

ஏனெனில்....
கண்ணீர் கசியும் துன்பம், ஏமாற்றம், சோதனை எல்லாம் என்னை வருத்தும் போதெல்லாம் துடிப்பது இதயம்தானே!
--------------------------------------------------------------------------------
நீ எனும் ஒற்றைச் சொல்......என்
வாழ்வின் முடிவுப்புள்ளி!
-------------------------------------------------------------------------------
அகிலத்தின் உயிர்ப்போட்டத்திற்கு இயக்கமாக இருக்கும் உன்னதமான உறவே காதல்..
இது மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, தாம் நேசிக்கின்றவர், தன்னை நேசிக்கின்றவர் எனும் வட்டத்தின் சுழற்சியின் அச்சாணி..
தன் நினைவுகளுள் புரண்டு உயிரோடிணைந்து உயிரை வருடும் தன் நேசிப்பின் நெருடலோடு ஆயுள் முழுதும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற ஆசை....இந்த அன்பு போராட்டத்தின் முதற்படியாகத் தொடங்கினாலும் இறுதியின் உச்சக்கட்டம் ரம்மியமான நினைவுகளின் சுகம்...
காதல் வெற்றி பெறலாம், தோற்றுப் போகலாம்....ஆனால் அதன் நினைவுகள் மரணம்கூட பிரிக்க முடியாதது!
--------------------------------------------------------------------------------

வான்குடை கவிழ்த்து தேன்துளி சிந்தும்
தருணம்......
சாரலாய் மெல்லத்தழுவியென்
ஈரமுறிஞ்சும் வண்டாய் உன்னிதழ்கள்!
--------------------------------------------------------------------------------
உன்னை மறந்துவிட்டு உறங்குவதாய்
திட்டுகின்றாய் இப்போதெல்லாம்.....
அட......
என்னவனே....
கனவுகளில் உன் கரம்பற்றி உலாவ வல்லவோ
இவ்வுறக்கம்!
முதல் காதல்
ஒரு சிறுமி பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அழகான ஓவியமொன்றை கண்டெடுத்தாள். ரம்மியமான அந்த ஓவியம் அவள் மனதைக் கவர்ந்திழுக்கவே, அதனை பத்திரமாக தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரப்படுத்தினாள். தினமும் ஐந்து நிமிடமாவது அந்த ஓவியத்தை பார்ப்பாள்.. ரசிப்பாள். மனமகிழ்வாள்.
காலம் உருண்டோடியது. அவளுக்கும் திருமணம் நடக்கின்றது. ஆனால் அவளின் ஓவிய ரசிப்பும் ஓயவில்லை. கணவன் உறங்கிய பின்னர் அதனை ரசிப்பது வழமையான விடயமாகி விட்டது.
ஒருநாள்
அவள் திருட்டுத்தனமாக ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது கணவன் எதிரில் நின்றான்.
"கையில் என்ன வச்சிருக்கிறே" - இது அவன்
அவளோ பட்டென்று சொன்னாள்
"இது என்னுடைய முதல் காதல்"
அவனும் அதனை வாங்கிப் பார்த்து விழிகளை விரித்தவாறே கூறினான்.
"இது நான் எனது ஒன்பதாவது வயதில் தொலைத்த சித்திரம்"
பார்த்தீர்களா......!
இந்த உலகம் சுற்றிக் கொண்டிருப்பது எங்கோ ஒரு மூலையில் நமக்காக அன்பு செலுத்தும் நெஞ்சமொன்றைத் தேடித்தர
அந்த உயிரை நாம் சந்தித்து விட்டால், அதன்பின்னர் நம் மனம் அந்த மனதின் நினைவுகளுடனேயே சுற்றுகின்றது.
- Jancy Caffoor-
சித்தத்தில்
தனிமை இனிமையானதுதான்...
ஆனால் அதைவிட இனிமையானது - தினமும்
அன்பானவர்களால் சூழ்ந்திருப்பது!
--------------------------------------------------------------------------------------
நம் வாழ்க்கையின் இயல்பு நிலையை திசைமாற்றும் ஓர் பாதை.......
அவசரமான முடிவெடுத்தலாகும்!
எந்த ஒரு விடயமும் அவசரமாக முடிவெடுக்கும்போது அங்கு உணர்ச்சிகளுக்கு மாத்திரமே இடமளிக்கின்றோம். புத்திசாலித்தனம் எங்கோ மறைந்து போகின்றது.
எனவேதான் .............
அவசரமான முடிவுகள்
அவசியமான நம் வாழ்க்கையின் நிம்மதியைக் கலைத்து விடுகின்றது!
Subscribe to:
Posts (Atom)