About Me

2014/08/16

WhatsApp



உணர்வுகளின்
அன்புப் பாலம்!

செல்லச் சண்டைகளின்
உஷ்ண கூடம்!

புகைப்படங்களைப் பரிமாற்றும்
கொடையாளி!

நம் மனதை மெஸேஜ்களாய்
வாசிக்கும் செய்திச்சாலை!

இரவும் பகலும்
நமக்குழைக்கும் தூதன்!

பேச்சொலி மறுத்து
மூச்சொலிக்குள் ஸ்பரிசம் சேர்க்கும்
காதல் பரிசு!

ஞாபகங்களைப் பதுக்கி வைக்கும்
களஞ்சியசாலை!

லாஸ்ட் ஸீனில் நம் வருகையைப்
போட்டுக் கொடுக்கும் துரோகி!

அட.....

இத்தனைக்குள்ளும்
எனக்குப் பிடித்தது..........

உன்னை தினமும் என்னுள்
அடையாளப்படுத்தும் பொக்கிஷ மது!


viber


காதல் வைரசின்
சைபர் குற்றமோ !

பேச்சின் அதிர்வுகளின்
ஒலிப்பதிவோ !

கைபேசிகளின் நுழைவை
அம்பலப்படுத்தும் அந்தரங்கமோ !

IDD கொள்ளையடிப்பை
ரத்துச் செய்யும் இராஜாங்கமோ!

இலவச சேவையினுள்
உலகம் சுருங்கி விட்டதடா...

உன்னையும் என்னையும்
உள்ளிழுத்தவாறு!

Jancy Caffoor



புரிந்து கொள்


கொற்றனே !
உன்னில் தடுமாற்றம் 
ஏன் என்னுள் மாற்றம்!

இற்றைவரைக்கும்
நீயென்னை  
வார்த்தைகளால் இம்சித்தும்
என்னுணர்வில் மாற்றமில்லை 

அன்பென்றும்
நிறமாறா பூக்கள் - இவ்
வகிலத்தில் 
நீயும்
நானும் விதிவிலக்கா சொல்!

புரிந்து கொண்டால்
இன்னும்
பரிவு வளரும் நமக்குள்!

Jancy Caffoor

இவன்


கேலியோடு பார்த்தவர்களெல்லாம் - இன்று
கேள்வியோடு!
மாற்றங்கள் தோலால் அல்ல
மானசீக உணர்வுப் பரிமாற்றங்களின்
உந்தல்களால்!

பிணத்திற்கும் உயிர் பாய்ச்சி
பிழைக்க வைத்த குணவாளன் நீ யென
காரணம் சொல்லவா எல்லோருக்கும்
காதைக் கொடுங்கள்!

இவன்......!

எரிமலைக்குள்ளும்
முத்துக் குளித்தவன்!

சூறாவளியையும்
ஆறத் தழுவி சுவாசம் தந்தவன்!

முடிந்து போன வழிச்சுவட்டுக்குள்ளும் - புதுத்
தடம் பதித்தவன்!

அழகுக்காக அலையும் ஆயிரம் பேர்களுள்
என்னுள்....
ஆத்மா தேடும் இவன்
வித்தியாசமானவன்தான்!

ஏனெனில்.....
தினமும் சண்டைதான் பிடிக்கின்றோம்..
அதுகூட
அன்பின் பரிமாணமாய்!

ஜன்ஸி கபூர்