கேலியோடு பார்த்தவர்களெல்லாம் - இன்று
கேள்வியோடு!
மாற்றங்கள் தோலால் அல்ல
மானசீக உணர்வுப் பரிமாற்றங்களின்
உந்தல்களால்!
பிணத்திற்கும் உயிர் பாய்ச்சி
பிழைக்க வைத்த குணவாளன் நீ யென
காரணம் சொல்லவா எல்லோருக்கும்
காதைக் கொடுங்கள்!
இவன்......!
எரிமலைக்குள்ளும்
முத்துக் குளித்தவன்!
சூறாவளியையும்
ஆறத் தழுவி சுவாசம் தந்தவன்!
முடிந்து போன வழிச்சுவட்டுக்குள்ளும் - புதுத்
தடம் பதித்தவன்!
அழகுக்காக அலையும் ஆயிரம் பேர்களுள்
என்னுள்....
ஆத்மா தேடும் இவன்
வித்தியாசமானவன்தான்!
ஏனெனில்.....
தினமும் சண்டைதான் பிடிக்கின்றோம்..
அதுகூட
அன்பின் பரிமாணமாய்!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!