வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். ஒவ்வொரு நகர்விலும் நமது காலடியில் பலவித அனுபவங்கள். அனுபவங்களை உள்வாங்கியபடி நாம் பயணிக்கும் போது சூழ்நிலைகளின் தாக்கத்திலும் உள் வாங்கப்படுகிறோம். எண்ணங்களை நாம் உருவாக்கி அதனை செயற்படுத்தி வாழ முயற்சிக்கிறோம். ஆனால் நாம் நினைத்த படி வாழ்க்கை அமையாத போது மனதிலும் அமைதி இன்மை குடி கொள்கிறது. அர்த்தமற்றதாக தோன்றும் வாழ்வில் துன்பங்களின் ஆதிக்கம் அதிகமாகிறது. வாழும் ஒவ்வொரு நொடியும் பெரும் சுமையாக மாறுகிறது. நாம் நம்பிக்கை வைத்த அனைத்துமே மாயமாக மாறி மனதை அங்கலாய்க்கிறது. உலக உருண்டையில் சுழலும் ஒவ்வொரு துளிகளிலும் நமக்கான வெறுப்பு மேலோங்குகிறது. நயம் தரும் வாழ்வு காயம் தரும் நகர்வாக மாற ஆரம்பிக்கிறது. புரிந்துணர்வில்லாத மனிதர்களின் சொல் , செயல்கள் புயலாக மாறி தாக்கும் போது வார்த்தைகள் நாவுக்குள் ஒடுங்கி மௌனமே சிறந்த தேர்வாக நமக்குள் அங்கீகரிக்கப்படுகிறது .
2019/06/16
மௌனமே சிறந்த தேர்வு

2019/06/15
கோபம்
கோபம் என்னை புதைக்கும் போதெல்லாம்
அடுத்தவர் பகைக்குள் புதைந்து விடுகிறேன்!
கோப மின்சாரத்தில் கருகிறது
என்னுள் தரித்து நிற்கும் நிம்மதி!
கோபம் என்னுள் திரை விரிக்கும் போதெல்லாம்
இருள் பார்வையை மறைக்கின்றது!
என் மௌனப்பாறை உடைந்து
கோபம் வார்தைகளாகும் போதெல்லாம்
மனம் பயணிக்கிறது வெறுமை வெளியில்!
கோபம் கண்ணை மூடும் போதெல்லாம்
வார்த்தைகள் வலி!
கோப வெள்ளத்தில் மனசு மிதக்கும் போதெல்லாம்
வலி எல்லாம் தீ !
கோபம் என்னுள் கர்ப்பம் தரிக்கும் போதெல்லாம்
நான் யாராகவோ மாறுகின்றேன்!
கோப மண்டலத்தில் நான் நுழையும் போதெல்லாம்
உறவுகள் தூரமாகின்றன
- Jancy Caffoor -

பூக்கள்
பூக்கள்
முட் தேசத்தின் முகவரி!
வண்டுகளின்
இராஜதந்திரி!
தேன்களின்
சேமிப்பகம்!
வீசும் காற்றின்
மேலாடை!
மகரந்த உச்சரிப்பின்
வாசம்!
வண்ணங்கள் பல வீசும்
வானவில்!
மரங்களின் விழிப்பை
அழகூட்டும் தூரிகை!
- Jancy Caffoor-
உன் நிழல் வீழ்த்த

என் தனிமை காத்திருக்கின்றது
துணையாக நீ!
மூங்கிலாக நான்
துளையாக நீ!
என் மனபாத்திரத்தில் - உன்
நினைவு வழிகிறது மதுவாக !
நான் மேகமாக மாறி - உன்னை
சுமந்து கொண்டிருக்கின்றேன் தினமும் !
என் குரல்வளை நாணுகின்றது
உன் பெயர் சொல்லும் போதெல்லாம்!
என் மூச்சு தினமும் வாசிக்கின்றது
உன் பெயரை அழகாக !
என் விழி திறந்தே இருக்கிறது
உன் நிழல் வீழ்த்த!
- Jancy Caffoor -
Subscribe to:
Posts (Atom)