நட்சத்திரம் விழித்திருக்கும்
பால்வெளியில்............
விழிகளைத் தாக்கும்
ஒளி வருடலாய் நீ!
பனி படர்ந்த போர்வையில்
முத்தென............
முத்துமிட்டுச் செல்லும் வியர்வைத்துளிகளாய்
உன் நினைவுகள்!
இப்பொழுதெல்லாம்
அடிக்கடி
உன் ஞாபக வரிகளை
வாசிக்கும் போது ..............
காயமாகின்றன என் விழிகள்!
என் விரல்களைப் பார்......
உனக்கு கடிதங்கள் எழுதி எழுதியே
ரேகைகள்
காணாமற் போயின!
உன் நினைவுப் பேரலையில்
வீழ்ந்து தவிக்கையில்
சுவாசம் கரைக்கின்றேன் - என்
வாசத்தை விற்றவளாய்!
கொல்லாதே- எனை
அணுவணுவாய் கொல்லாதே!
எஞ்சிய காலத்திலாவது
கொஞ்சம் வாழ வரம் கொடு!......
உன்னை இப்பொழுதெல்லாம்
யாசிக்கின்றேன் ..........
அனுமதிப்பாயா...........
அவசரமாய் உன் ஞாபகங்களை
பெயர்த்தெடுக்க!
கொஞ்சம் பொறு......
உன்
சிரிப்பை பெயர்த்து
சலங்கையாக்கப் போகின்றேன்!
கொஞ்சம் பொறு.......
உன்
பார்வையைத் திண்மமாக்கி
பனிக்கட்டியாத்
தூவுகின்றேன்!
கொஞ்சம் பொறு.......
உன் குரலலையின்
அதிர்வை
காற்றினில் கோர்க்கின்றேன்
மெல்லிசையாய்!
கொஞ்சம் பொறு........
உன் நிறத்தைப்
பிரதியெடுத்து
நிலாவை முலாமிடப் போகின்றேன்!
கொஞ்சம் பொறு......
சிப்பிகள் சினக்கின்றன- தம்
முத்துக்கள்
உன் னுதட்டினில்
சிறை வைக்கப்பட்டிருப்பதாய்!
சொல்லி விட்டுப் போ...........
உன் சுவாசத்திலும்
பூவாசம் - நீ
பூவை என்பதாலா!
வாழ்க்கைப் பாதைக்காகதீர்மானிக்கப்பட்ட பயணம்!கருவறைத் தரிப்புக்களுக்காய்வழங்கப்பட்ட அனுமதி!தனிமைச் சாளரம் தாழ்பாளிடஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!சரீரம் வருடி சாரீரம் தொடும்இன்னிசை!தாலியால் வேலியிடப்படும்உறவுச்சாலை!சம்பிரதாயங்களின் முகவுரையோடுஎழுதப்படும் காவியம்!ரொக்கத்தின் கனத்தில்இருவரிணையும் சங்கமம்!வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்வாழ்த்துத் தூவும் பூமாலை!ஆயுள் மன்றத்தில் ஓர்முறையேஅரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதைகண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்வழிந்தோடும் நீரோடை!வாலிப வித்தைகளைக்கட்டிப் போடும் கடிவாளம்!கனவுச் சிறகறுத்து மனசைநனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!நான் நீயாகி........நீ நானாகும்மனசின் மந்திரப் பிரகடனம்
இருளின் ரகஸியத்தில் இப்போதெல்லாம்வீழ்ந்து கிடக்கின்றது நம் பனிப்போர்!நினைவுச் சாவி திறந்துன்னை.........களவாய் ரசிக்கையில்கன்னம் வைக்கின்றாய் மெல்ல - என்கன்னம் சிவக்க!அரிதாரம் பூசப்படும் கனவுகளுக்காய்கர்ப்பம் தரிக்கும் நம் காதல்.......இப்போதெல்லாம் - சிலபிடிவாதங்களின் ஆளுகைக்குள்பிரவேசிக்கின்றதுஊடலைத் தெறித்தபடி!அடுத்தவருக்காய் என்னை நீவிட்டுக் கொடுக்கப் போவதுமில்லை.........என்னிடம் தோற்கப் போவதுமில்லை!......காத்திரு ...............கணப்பொழுதில்தாவி வருகின்றேனுன்னைத் தழுவி நிற்க!