About Me

2020/09/04

அந்தாதிக் கவிதை

 உயிரில் கலந்து உதிரத்தில் செதுக்கி/

செதுக்கி எடுத்தாரே அன்னையும் அன்பாலே/

அன்பாலே மனங்களை ஆள்கின்றார் நிதமும்/

நிதமும் நினைவுகளில்  வாழ்கின்ற உறவே/

உறவே உயர்வாகும் தாய்மையின் நிழலிலே/

நிழலிலே ஒதுங்குகையில் துயரமெல்லாம் இன்பமே/

இன்பமே இதயத்தில் இணைந்திருக்கின்ற வாழ்விலே/

வாழ்விலே கண்டெடுத்த அன்பின் சொர்க்கமே/

சொர்க்கமே என்பேனே தாயின் மடியும்/

மடியும் துடைத்திடும் எந்தன் துன்பத்தை/


ஜன்ஸி கபூர் 

அனுபவப் பாடம்

வகுப்பறையே வரம்தானே ஆளுமைகள் சிறந்திடவே/ 

வாழ்க்கையின் அனுபவங்களை பாடங்களாய் கற்கையிலே/

வெற்றியின் வழியினில் சாதனைகள் நமதாகும்/

கற்கண்டாய் திறமைகளும் காண்பவரைக் கவர்ந்திடுமே/

கல்வியினால் பெற்றிடும் நடத்தை மாற்றங்களே/

சிறந்த மனிதர்களை சமூகத்தினில் உருவாக்கும்/

ஜன்ஸி கபூர் 



வாழ்க்கைத் துணைநலம்


திருக்குறள்-4

#தற்காத்துத்_தற்கொண்டான்_பேணித் #தகைசான்ற_சொற்காத்துச்_சோர்விலாள்_பெண்.


கற்பின் அழகி 

வாழ்தலும் சிறந்திட மங்களமான இல்லாள்/

வாழ்க்கைத் துணையின் உணர்வோடு இசைவாள்/

கற்பின் ஒழுக்கத்தினில் கருத்துடன் கலந்தே/

கட்டிய துணையுடன் புகழையும் காப்பாள்/

வல்லமை மனமே வனப்போடு மனையாள/

வார்த்தை அழகுடன் சோர்வின்றி வாழ்ந்திடுவாள்/

ஜன்ஸி கபூர்  


2020/09/03

பெண்ணின் பெருமை

 

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக/

பாரையும் ஆள்கின்ற அற்புத சக்தியவள்/


அறிவின் தடத்தினிலும் ஆளுமையோடு பயணிக்கையில்/

அண்டத்தையும் அளந்திடுவாள் மதி நுட்பத்தால்/

சந்தர்ப்பங்களைச்  சாதனைகளாக மாற்றிடும் சுவடெல்லாம்/

சந்தோச வாழ்வும் ஆளும் தினமும்/


விழிகளில் மொய்க்கின்ற அன்பிற்கே இலக்கணமாம்/

விட்டுக்கொடுத்தே தேய்கின்ற தாய்மையின் விளைநிலமாம்/

விருந்தோம்பலும் உயிர்த்திடுமே மங்கையவள் பண்பினிலே/

விளைகின்ற பொறுமைக்குள் மலருமே பெருமையும்/


ஜன்ஸி கபூர்