சிறகை வருத்தி உடலும் வருந்த
பறக்கின்ற கழுகைத் துரத்துகின்றதே காகம்
துறந்திடாத பகைமையினில் வான் தாக்குதலோ
அறமில்லா பழி வாங்கல் ஆகாயத்தினில்
வலிமைக் கழுகு இலக்கின் பற்றே
எளியோர் செயலுக்கும் சினமது வீணே
உயர்ந்த வானும் காகத்திற்கு ஒவ்வாதே
உயரப் பறந்ததே கழுகும் வென்றிட
உடலும் அறிவும் கொண்ட வலிமை
உயர்த்திடுமே வாழ்வினில் துரத்திடுமே இன்னலையும்
விரட்டிடுமே பகைமைதனை மதியின் நுட்பமே
விழைந்திடும் வெற்றியின் தடத்திலும் வீரமே
ஜன்ஸி கபூர்