தலைமுறை தந்த சொத்தாக/
பண்பாட்டு வாழ்க்கை எனக்குள்/
நல்லறத்தின் நற்பயனால்/
நற்குடியாக வாழ்கிறேன்./
ஜன்ஸி கபூர் - 06.09.2020
தலைமுறை தந்த சொத்தாக/
பண்பாட்டு வாழ்க்கை எனக்குள்/
நல்லறத்தின் நற்பயனால்/
நற்குடியாக வாழ்கிறேன்./
ஜன்ஸி கபூர் - 06.09.2020
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மலைகளில்/
இசைக்கின்றதே அருவியும் தென்றலில் நசிந்து/
அசைகின்ற விழிகளாய் சிறகடிக்கும் பூச்சிகள்/
அலைகின்றதே மலர்களின் இதழ்களை நுகர்ந்தே/
சந்தனத்தை பிசைகின்ற வானோரத்தில் புன்னகை/
துள்ளி ஓடுகின்ற வெண்மேகங்கள் கண்டே/
அள்ளிச் சொருகுகின்றதே பரவசமும் எனக்குள்ளே/
வெண் தாவணி நழுவுகின்றதோ அருவியில்/
வெட்கத்தில் சிரிக்கிறதே நீரின் துடிப்புக்களும்/
வெடித்திடும் பூக்களின் நறுமணச் சுவையினில்/
உள்ளம் தித்திக்கின்றதே தரிசனங்களின் லயிப்பில்/
உவகையின் ஆளுகையில் கழிகின்றதே பொழுதும்/
ஜன்ஸி கபூர்
தென்னையை வைத்தால் பலன் கண்டு செல்வார்கள்
பனையை நட்டால் பார்த்துவிட்டுச் செல்வார்கள்
நிலத்தடி நீரைப் பதப்படுத்தி நமக்கே/
தலையால் தருமே நுங்காகி இனிக்க/
மடி பூக்கவே பல ஆண்டுகள்/
இடி தாங்கியே மழையும் பூக்கையில்/
கருணைத் துளிகளாய் கற்பக விருட்சமே/
காத்திடுவோம் பாரம்பரியத்தை சந்ததிகளுக்கும் கையளிப்போம்/
ஜன்ஸி கபூர்
சிறகை வருத்தி உடலும் வருந்த
பறக்கின்ற கழுகைத் துரத்துகின்றதே காகம்
துறந்திடாத பகைமையினில் வான் தாக்குதலோ
அறமில்லா பழி வாங்கல் ஆகாயத்தினில்
வலிமைக் கழுகு இலக்கின் பற்றே
எளியோர் செயலுக்கும் சினமது வீணே
உயர்ந்த வானும் காகத்திற்கு ஒவ்வாதே
உயரப் பறந்ததே கழுகும் வென்றிட
உடலும் அறிவும் கொண்ட வலிமை
உயர்த்திடுமே வாழ்வினில் துரத்திடுமே இன்னலையும்
விரட்டிடுமே பகைமைதனை மதியின் நுட்பமே
விழைந்திடும் வெற்றியின் தடத்திலும் வீரமே
ஜன்ஸி கபூர்