எப்போதும் மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பிக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கும் மனது❤❤❤
சின்னச் சின்ன விடயங்களுக்காக அச்சந்தோசங்களைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கின்றது👎👎👎
ஜன்ஸி கபூர் - 9.4.2021
எப்போதும் மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பிக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கும் மனது❤❤❤
சின்னச் சின்ன விடயங்களுக்காக அச்சந்தோசங்களைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கின்றது👎👎👎
ஜன்ஸி கபூர் - 9.4.2021
💧💧💧💧 வீழ்கின்ற மழைத்துளிகள் 💧💧💧💧
🌺🌻🌼🌷 தவழ்கின்றன மலர்களில் பனித்துளிகளாக 🌺🌻🌼🌷
கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் நமது தேடலுக்கான விடைத் தளங்களாகவும் இருக்கலாம்.
ஜன்ஸி கபூர் - 08.04.2021
தோல்வி நம்மைத் தாக்கும்போது நமது மனம் வேதனையில் தவித்தாலும்கூட, அத்தோல்வி தொடர்பாக ஆராய்கின்றது. நம்மை நாமே திரும்பிப் பார்க்கும் எண்ணத்தைத் தருகின்றது.
தோல்வி நிரந்தரமல்ல. 👆👆👆👆
வழியும் கண்ணீரும் நிரந்தரமல்ல. 😊😊😊😊
எனவே ஓவ்வொரு தோல்வியிலும் நாம் வாழ்வைக் கற்றுக் கொள்கின்றோம்.
ஜன்ஸி கபூர் - 08.04.2021
எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் நினைவை விட்டு நீங்காத பதிவு இது.
அன்று ....2017.04.05 ஆம் திகதி இறையடி சேர்ந்த எனது அன்பு தந்தையார் பற்றி நான் மதிக்கின்ற ஆசான் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் மீட்டிய பதிவு இன்று முகநூல் திரை வழியாக என்னை எட்டிப் பார்த்தது. கூடவே கண்ணீர் ஈரம்பட்டும் கரையா இந்நினைவினை இத்திரையில் பதிவது மனதிற்குள் தந்தையுடன் இருப்பதைப் போன்ற ஆறுதல்....
வாப்பா.....
உதிர்கின்ற ஒவ்வொரு வருடங்களிலும் உலராத உங்கள் நினைவுகள் என் பொக்கிசமாக என்னுடனே பத்திரப்படுத்தப்படும்.
-------------------------------------------------------------
ஓய்வுபெற்ற அதிபர் O.S.M.A கபூர் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் யாழ் வைத்தியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் இறையடி சேர்ந்துள்ளார். 82 வயதில் காலமான இவர் 1990ஆம் ஆண்டு வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தொடக்கம் 2015 வரை அநுராதபுரத்தில் வசித்தவர் ஆவர்.
முதலாம் வகுப்பு அதிபரான இவர் அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம், வட மத்திய மாகாண கல்வித் திணைக்கள தமிழ் பிரிவு போன்ற நிலையங்களில் 1995ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை இணைப்பு செய்யப்பட்டு கடமையாற்றி வந்துள்ளார். அதிபர் ஜன்ஸி கபூர், ஆசிரியை ஒஸ்லி கபூர், வைத்தியர் ஜனோஸ் கபூர் ஆகியோரின் அன்புத் தந்தையர் ஆவர்.
-----------------------------------------------------------------
ஒரு நிறுவனத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஒரே தினத்தில் நல்லடக்கம்.
---------------------------------------------------------------
வடமத்திய மாகாண கல்வித்திணைக்களத்தில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமை பார்த்த , இக்கிரிகொள்ளவையைச் சேர்ந்த ஏ .பி .எஸ் .ஹமீட் அவர்களும், இந்தப் பிரிவில் இணைப்பு செய்யப்பட்டு கடமையாற்றி வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அதிபர் ஓ .எஸ்.எம்.ஏ .கபூர் அவர்களும் ஓய்வு பெற்று நீண்ட காலத்தின் பின்னர் சில மணி நேர இடைவெளியில் இறையடி சேர்ந்து 06.04.2017 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது அபூர்வமான விடயமாகும்.
கொழும்பில் தவிர்க்க முடியாத பணியொன்றின் இருந்தமையால் மிக நெருக்கமாக பழகிய இவர்கள் பிரிவில் பங்கு கொள்ள முடியாத கவலையை வாழ்க்கை முழுக்க சுமக்க வேண்டி இருக்கும்
- அன்பு ஜவஹர்ஷா -