About Me

2021/04/13

அம்மாவும் அப்பாவும் கவிதைகள்

 --------------------------------------------------------------------------


 
உயிரினை வார்த்த உன்னத உறவுகள்/
உயிர்த்தனர் எனக்குள் அப்பாவும் அம்மாவுமாக/

வாழ்வின் தடங்களில் வசந்தமாகப் பூத்தே/
வாழ்த்தினர் என்றும் வளமாக வாழ்ந்திடவே/

எந்தன் உணர்வினை அழகாக மொழிந்தே/
சிந்தினர் எனக்குள் அன்பெனும் கவிதைதனை/

ஜன்ஸி கபூர் - 8.12.2020
 

கண்ணீர் பேசுகிறது

 

பொங்கும் அலைகளைப் புரட்டுது புயலும்/

தங்குமிடம் அழியத் தவிக்குதே மனமும்/

வங்கக்காற்றும் விரிக்கின்ற சுழல்ச் சிறையினில்/

தொங்குதே வாழ்வும் இன்னலுக்குள் வீழ்ந்தே/

வாழ்வின் தடங்களை இயற்கையும் அழிக்கையில்/

விழிகளின் மொழியாகின்றதே வழிகின்ற கண்ணீரும்/

ஜன்ஸி கபூர் - 3.12.2020


தடுமாறும் வாழ்க்கை


நிலையற்ற மனதால்  நினைக்கும் எண்ணங்கள்/

அலையுமே தடமாறி  அவலமே வாழ்வுக்குள்/

வாழ்வாதாரம் தேடும்  வறுமைச் சுமைக்குள்/

தாழ்கின்ற பொழுதுகள்  தள்ளாடுமே விடிவுமின்றி/


இடுக்கண் பற்றும்  இயற்கை அனர்த்தங்களால்/

தடுமாறும் வாழ்க்கையும்  தொலைக்குமே நிம்மதி/


ஜன்ஸி கபூர் - 7.12.2020







விதியை மதியால் வெல்வோம்

 ---------------------------------------------------------------------------------------



வீரமும் ஆற்றலும் விளைந்திடும் தேகம்/
கோரமாகி வீதியினில் விதைக்கப்படுகிறதே காயங்களால்/
விவேகமில்லா வேகம் விடுக்கின்ற அழைப்பால்/
விபத்தின் தடத்தில் வீழ்கின்றதே உயிரும்/

சிந்தனைச் சிதறலின்றி இலக்கில் சென்றிட/
சிறப்பாகக் கடைப்பிடிப்போம் சாலை விதிகளை/
பாதைக்குள் மோதும் விதியின் இடர்களையும்/
பக்குவமாக நீக்குமே மதியின் விழிப்புணர்வும்/

ஜன்ஸி கபூர் - 24.12.2020