About Me

2021/04/13

வெற்றி நமதே

கற்ற அறிவும் பெற்ற அனுபவங்களும்/
தற்றுணிவும் தன்னம்பிக்கையும் உணர்வினில் சேர்கையில்/

ஆற்றலின் உழைப்பு ஆரமாகும் எதிர்காலத்திற்கே/
நேயத்துடன் மானிடமும் போற்றுகின்ற பண்பாடும்/

நம்மைப் பற்றுகையில் நல்லுறவுகள் நமதாக/
மாண்பான வாழ்வும் வெற்றி தருமே/

ஜன்ஸி கபூர் - 21.12.2020

முத்தமிழை முத்தமிடுவோம்

   

தொப்புள்கொடி உறவினில் பூத்த மொழியே/
தொடர்கின்றாய் எம்முடன் முத்தமிழின் எழிலாகி/

சங்கம் வளர்த்த சரிதம் கேட்கையில்/
பொங்குதே இன்பமும் பெருமைக்குள் தாய்மொழியென/

மூத்தமொழி எம் சொத்தெனச் செப்பியே/
முத்தமிடுவோம் உதடுகளின் அசைவால் மொழிந்தே/

ஜன்ஸி கபூர் - 10.12.2020
 

அம்மாவும் அப்பாவும் கவிதைகள்

 --------------------------------------------------------------------------


 
உயிரினை வார்த்த உன்னத உறவுகள்/
உயிர்த்தனர் எனக்குள் அப்பாவும் அம்மாவுமாக/

வாழ்வின் தடங்களில் வசந்தமாகப் பூத்தே/
வாழ்த்தினர் என்றும் வளமாக வாழ்ந்திடவே/

எந்தன் உணர்வினை அழகாக மொழிந்தே/
சிந்தினர் எனக்குள் அன்பெனும் கவிதைதனை/

ஜன்ஸி கபூர் - 8.12.2020
 

கண்ணீர் பேசுகிறது

 

பொங்கும் அலைகளைப் புரட்டுது புயலும்/

தங்குமிடம் அழியத் தவிக்குதே மனமும்/

வங்கக்காற்றும் விரிக்கின்ற சுழல்ச் சிறையினில்/

தொங்குதே வாழ்வும் இன்னலுக்குள் வீழ்ந்தே/

வாழ்வின் தடங்களை இயற்கையும் அழிக்கையில்/

விழிகளின் மொழியாகின்றதே வழிகின்ற கண்ணீரும்/

ஜன்ஸி கபூர் - 3.12.2020