About Me

2012/06/26

நான் வரைந்தவை

"பெப்ரிக்" ( இந்தியா) வர்ண நிறுவனம் நடாத்திய துணி ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இருபத்தைந்து பேரில் முதலிடம் பெற்ற என் தூரிகை அசைவுகள் இவை-




















மீண்டும் உரிய முன்பக்கத்திற்குச் செல்ல வேண்டுமாயின் இதனை அழுத்துக

விபத்துக்கள்


அழகான வாழ்க்கையின் அர்த்தங்கள் ஓர் நொடிப் பொழுதின் விபத்துக்கள் மூலம் சிதறிப் போய் விடுகின்றன. ஊனங்களும், உயிரிழப்புக்களும் விபத்தின் கொடுரமான பக்கங்கள். பெரும்பாலும் வீதி விபத்துக்களுக்கு கவனயீனம், அவசரமே காரணமாகின்றன. ஓர் நிமிட தாமதங்களை விரும்பாமல் விரைந்து செல்ல முயற்சிக்கும் போக்கு தரும் அழிவுகள் நாள் தோறும் செய்திகளாக அனுபவங்களாக நம் கண்முன்னால் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.

நானும் வீதி விபத்தொன்றில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிக்கியவள் தான். முகத்தில் காயம். மயிரிழையில் எனது இடது கண் தப்பியது. மழை நாளொன்றில் எனது மோட்டார் வாகனத்தில் செல்லும் போது எதிர்பக்கத்திலிருந்து வந்த வாகனத்திற்கு இடமளிப்பதற்காக விரைவாகப் பாதையைக் கடக்க முயற்சிக்கும் போது மழைநீரில் நிரம்பியிருந்த குழியினுள் மோட்டார் வாகனச்சில்லு உருண்டதால் ஏற்பட்ட அந்த விபத்தின் ஞாபகங்கள் ஒவ்வொரு நாளும் அந்த முகத்தழும்புகளால் உயிர்ப்பூட்டப்படுகின்றன.

இரத்தத்தில் தோய்ந்த ஹெல்மெட் கண்ணாடியும், சிவப்பு நிறமாக மாற்றப்பட்ட என் மழை அங்கியும் இரத்தக் கசிவாகி நின்ற என்னைப் பார்த்த என் உறவுகளின் கதறல்களும் இன்றும் என்னுள் மறக்கப்படமுடியாத பதிவுகள்.

வீதியில் இறங்கும் போதே உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பயணிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் தொழிலுக்குப் போகும் பெண்கள் வீதியை மறந்து வாழ முடியாது.ஆண்களின் இயக்கம் அவர்களுக்கும் மறுக்கப்படாத நிகழ்வாகி விட்டன. விபத்துக்களைப் பொறுத்தவரையில் தாமே பயணித்து விபத்துக்குள்ளாகும் நிலை ஆண்களுக்கே அதிகம்.

நாம் எவ்வளவுதான் கவனமாக ,அவதானமாகச் செயற்பட்டாலும் கூட ஏனையோரின் கவனயீனமும் , அவசரமும் நமக்குள் பாதிப்பைத் தருகின்றன.

வீதியில் அன்றாடம் சதை கிழிந்து , குருதி கசிந்து மலினப்பட்டுக் கிடக்கும் மனிதங்களின் கோரங்கள் தினம் தினம் செய்தியாக அல்லது கண்ணுள் விழும் காட்சியாகிப் போகின்றது. இந்நிலையில் விபத்தைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்குதாரராக மாற வேண்டும்.

பெரும்பாலான விபத்துக்கள் இரவிலேயே நடைபெறுகின்றன. இதற்கு காரணமாக சாரதியின் தூக்கமோ அல்லது சனநடமாட்டம் குறைந்ததால் வேகமாகப் பயணித்து , அதன் விளைவாக தன்னிலைப்படுத்த முடியாமல் விதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்துடன் மோதுதல் அல்லது குடைசாய்தல் போன்றவற்றைக் குறிப்படலாம்.

எனவே விபத்துக்களைத் தவிர்க்க சில டிப்ஸ்-
---------------------------------------------------------------
பெரும்பாலும் இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் செல்ல வேண்டிய அவசியமேற்பட்டால் வாகனமோட்டுபவர் விழிப்புடன் ஒட்டுதல் வேண்டும். தனித்துப் பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும். உடல் அயர்ச்சியோ அல்லது தூக்கமோ ஏற்பட்டால் வாகனத்தை சற்று நிறுத்தி ஓய்வெடுத்தல் வேண்டும்.

மனஅழுத்தத்துடனோ அல்லது கவன கலைப்புக்களால் மனம் தடுமாறும் போதோ வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

வாகனம் வீதியில் பயணிக்க வேண்டிய குறித்த வேகங்களிலேயே பயணிக்க வேண்டும். பெரும்பாலானோர் தம் திறமையை அடுத்தவருக்கு வெளிப்படுத்த உச்ச வேகத்தில் பயணிப்பார். இத் தவறு கூட நம்முடன் பயணித்துக் கொண்டிருப்போரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியது.


சனத்தொகைப் பெருக்கத்தினதும், நகரமயமாக்கலினதும் முக்கியமான விளைவுகளுள் ஒன்றாக அதிகரித்த வாகனப் பயன்பாடுள்ளது. தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்த நிலையிலும் கூட ஒவ்வொரு வீடுகளிலும் வாகனங்கள் காணப்படுகின்றன. இதனால் வீதியில் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.

நாம் பயணிக்கும் போது இரண்டு வாகனங்களுக்கிடையில் உள்ள இடைத்தூரத்தை பேணல் வேண்டும்.அத்துடன் வீதி விளக்குகள், சைகை விளக்குகள் உரிய விதத்தில் ஒளிரச் செய்வதும், வாகனப் பயன்பாட்டின் முன்னர் வாகனத்தின் இயக்க நிலையைச் சரி செய்வதும், நன்றாகப் பயிற்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்ற பின்னர் வாகனமோட்டுவதும் நமது கடமையாகின்றது.






பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வாகன பின் இருக்கைகளில் அமரும் போது சேலை சில்லிற்குள் சுற்றுவதால் விபத்துக்கள் நிகழ்கின்றன.

மேலும் பேருந்து போன்ற பொது வாகனங்கள் உரிய தரிப்புக்களில் நிறுத்தும் போது பயணிகளை ஏற்ற அவசரப்படுத்துவார்கள். அவர்கள் ஏறுவதற்கிடையிலோ அல்லது இறங்குவதற்கிடையிலோ வாகனத்தை விரைவுபடுத்துவதாலும் பயணிகள் கீழே விழுந்து விபத்துக்களுக்குள்ளாகின்றனர். அதுமாத்திரமின்றி மதுபாவனை, நோயுடன் வாகனமோட்டுதல், வாகனம் பயணிக்கும் போது வீதியில் நடமாடும் மிருகங்கள் குறுக்கே பாய்வதும் விபத்துக்களின் மூலவேர்களாகும்.

நம் உயிரின் பெறுமதியை ஏனோ நாம் உணர்வதில்லை. எதிர்பாராமல் அசம்பாவிதம் நடைபெற்ற பின்னர் அந்தப் பாதிப்புக்கள் தரும் ஊனமும் உயிரிழப்புக்களும் நம்மை மட்டுமல்ல நம் உறவுகளையும் பாதித்து விடுகின்றன.

வாழ்க்கை என்பது நீண்டகாலப் பயணம். சில அவசரங்களும் கவனயீனமும் அந்த வாழ்க்கையைச் சிதைக்கும் போது அந்த இழப்புக்கள் தாங்க முடியாதவை. நம்மைப் படைத்தவன் நம்மைக் காத்தருளுவானாக!


- Ms. Jancy Caffoor -
























மௌனம்




நிசப்தத்தின் சுவாசத்தில் 
வெட்கித்துக் கிடக்கின்றது
நம் மௌனம்!

மிரண்டோடும்
மின்மினிகளின் சிறகடிப்பில்- என்
புன்னகை நசுங்கிப் போகின்றது!

பூவுக்குள் தன் சிறகு தேடும்
பட்டாம் பூச்சியாய் 
உன்னுள் எனைத் தேடி
தோற்றுக் கிடக்கின்றேன் ஏக்கவெளியில்!

வேம்பின் விரலிடுக்கில்
குந்திக் கொண்டிருக்கும் - அந்த
ஒற்றைப் பறவையாய்
சயனித்துக் கிடக்கின்றேன் 
உன் வீதியோரங்களில்!


ஒற்றையாய் அலையும்
மேகத்தின் சில்மிஷத்தில் - உன்
நினைவுகள் பிறாண்டுவதால்- என்
விழிகள் வாந்தியெடுக்கின்றன தினமும்!

நீயென்னைக் கடந்து செல்லும்
தருணங்களெல்லாம்- என்
பேனாவின் வீரியமறுந்ததாய்
பிரமிப்பு என்னுள்!

நீயென்னை மறுத்த பொழுதுகளில்
அந்தரித்துக் கிடந்தேன்
இருள் கவிழ்ந்த நிலவாய்!

வான் விரட்டும் மழையாய்
என் மடி நனைத்த நீ 
ஏனோ இப்பொழுதெல்லாம்
நம்முள் இடைவெளி வளர்த்தாய்
மனசுள் வலி தந்தபடி!

இருந்தும் 
வெட்ட வெளியில்
ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த
நிலாக் கசிவில் - உன்
ஞாபகங்கள் புதுப்பிக்கப்படுகின்றன
மீண்டும் புளாங்கிதமாய்!

ஜன்ஸி கபூர் 










2012/06/25

என் பதிவுகள்



சிறு வயது முதல் எந்த சிறு விடயமாயினும் அதனை ஒழுங்குபடுத்தி நேர்த்தியாகச் செய்யும் இயல்புள்ளவள் நான். என் முகநூல் ஓட்டத்திலும் அந்தப் போக்கு தலை காட்டியதால், எழுத்து வடிவம் பெறும் சிந்தனைகளின் தனித்தன்மை பேண ஒவ்வொரு குறிக்கோள் வகுத்து சில குறுப் களையும், சில பக்கங்களையும் உருவாக்கியுள்ளேன். ஏனெனில் நமது சிந்தனைகள் எழுத்து வடிவம் பெறும் போதே ஆவணப்படுத்தப்படுகின்றது. ஆவணப்படுத்தல் என்பது நம் முயற்சியை, ஆற்றலை பிறர் அங்கீகரிக்கச் செய்யும் ஓர் உபாயமாகும்.


முகநூலில் என் பதிவு-
-------------
Jancy Caffoor


இணைய வலைப்பூ (Blogger)
-------------------------------------
கவிதாயினி




முகநூலில் என்னால் உருவாக்கப்பட்ட பக்கங்கள்
-----------------------------------------------------------------------


 
1. வானவில்-
அவ்வவ்போது மனதில் தோன்றும் பசுமையான எண்ணங்களின் வார்த்தை வரிகள்

2. அநு-
சர்வதேச தினங்கள் தொடர்பான பதிவுகளுக்கான பக்கம்
  
அந்தக் களத்தின் மீதான பயணமே இது. என் நட்பை ஏற்ற, புரிந்துணர்வுமிக்க நட்புள்ளங்களின் வாழ்த்துடன் இந்தப் பயணம் தொடரும்.  

என் பயணம் தொடர்கின்றது !

- Ms.Jancy Caffoor -