நிசப்தத்தின் சுவாசத்தில்
வெட்கித்துக் கிடக்கின்றது
நம் மௌனம்!
மிரண்டோடும்
மின்மினிகளின் சிறகடிப்பில்- என்
புன்னகை நசுங்கிப் போகின்றது!
பூவுக்குள் தன் சிறகு தேடும்
பட்டாம் பூச்சியாய்
உன்னுள் எனைத் தேடி
தோற்றுக் கிடக்கின்றேன் ஏக்கவெளியில்!
வேம்பின் விரலிடுக்கில்
குந்திக் கொண்டிருக்கும் - அந்த
ஒற்றைப் பறவையாய்
சயனித்துக் கிடக்கின்றேன்
உன் வீதியோரங்களில்!
நினைவுகள் பிறாண்டுவதால்- என்
விழிகள் வாந்தியெடுக்கின்றன தினமும்!
நீயென்னைக் கடந்து செல்லும்
தருணங்களெல்லாம்- என்
தருணங்களெல்லாம்- என்
பேனாவின் வீரியமறுந்ததாய்
பிரமிப்பு என்னுள்!
நீயென்னை மறுத்த பொழுதுகளில்
அந்தரித்துக் கிடந்தேன்
அந்தரித்துக் கிடந்தேன்
இருள் கவிழ்ந்த நிலவாய்!
வான் விரட்டும் மழையாய்
என் மடி நனைத்த நீ
ஏனோ இப்பொழுதெல்லாம்
நம்முள் இடைவெளி வளர்த்தாய்
மனசுள் வலி தந்தபடி!
இருந்தும்
வெட்ட வெளியில்
வெட்ட வெளியில்
ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த
நிலாக் கசிவில் - உன்
ஞாபகங்கள் புதுப்பிக்கப்படுகின்றன
மீண்டும் புளாங்கிதமாய்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!