About Me

2012/11/26

நீயே என்னுறவாகி


மெய் காதல்
மெய் தீண்டுமோ...............!

அழகான இம்சை கரைத்து - நிதம்
பொய்யுரைத்தாய்........

உலர்ந்தவுன் னிதழ்கள் ஈரலிப்பில்
தோய்ந்து கிடக்க!

இருள் முக்காடிட்ட - பல
இராக்கள்..............
மௌனத்தி லுறைந்து கிடக்க

இப்பொதெல்லாம் - நம்
அலைபேசியின் குசுகுசுப்பை
காதல்
மொழிபெயர்த்துக் கொள்கின்றது
இரகஸியமாய்......!

லப்டொப்பில் வுன் முகம் திணித்து
என்.........
லப் டப் அதிர்வினை - நீ
தினம் ருசிக்கையில்.............

வெட்கித்துக் கிடக்கும் தலையணைகள்........
மிரட்சியோடுன் நினைவுகளைப்
பத்திரப்படுத்துகின்ற - நீயே
என் உறவென!












2012/11/18

என் செய்வேன்!




நெஞ்சக் கூட்டின் சுருதியலைகளில்
மோதி ஓய்கின்றது
பெருமூச்சொன்று!

தொலைந்து போன நிஜங்களின்
சாம்பர் மேட்டின்...........
அக்கினிப்பூக்களாய்
எழுதுகோல்கள் உருமாறியதில்........

கற்பனைகள் கூட
வலியில் வெந்து
கருகிப் போனதோ!
கவியும் பஞ்சமானதோ!

இருந்தும்...............
மனச்சிறகசைத்து
விழிகளை விரும்பிய திசைகளிலெல்லாம்
கவிக்கருக்காய்
தூதனுப்புகையில்....................

நாடியுடைக்கும் யதார்த்தங்களால்
செந்நீர் கரைந்து..........
கன்னங்களைத் துடைக்கின்றன
கண்ணீராய்க் கசிந்து!

வெறுமை வெளிக்குள் பூத்தவென்
உயிரோ........
முடிவிலிச் சலனத்தால்...................
கருக்கட்டப்படாத  கனவுகளைத் தேடி
அலைகின்றது வீணாய்!

இப்பொழுதெல்லாம்
மௌனங்களோடு மட்டும் பேசியவென்
உதடுகள்..........
மானுட பாஷையை மறந்து போக.......

இது புரியாமல்............!

வெட்டியெறியப்பட்ட  என் புன்னகையையும்
வார்த்தைகளையும்.............
மீண்டும்
என்னுள்ளே நட்டிவிட............
கங்கணம் கட்டுகின்றனர்  நண்பர் குழாம்..........!

நட்புச்சிறையுடைத்தே........
தனி வழிதேடி............நானும்
மிரண்டோடினாலும்

பாறை நிழலுக்குள்ளும்
ஓரமாய்.............
துளிர்த்திருக்கும் பாசம் தாமென..............
மிரட்டுகின்றனர் ..........

ஐயகோ!
என் செய்வேன்...........



























2012/10/29

மனத்துளிகள்























இன்றைய பொழுது


தூறல் விழும் முகில் நீரின் சந்தம்
மெல்லிசையாய் காதில் விழ.......
நரம்புகளின் கிசுகிசுப்பில்
கூதல் காற்றும் நாணிக்கிடக்க
விடிந்ததென் விடியலின்று!

இருந்தும்.........
மழையுரசல் கண்ட மனசோ
விழியுறக்கமறுத்து
உறிஞ்சிக்கொள்கின்றதின்றைய அழகை!

கீழ்திசையில்
பதியமிடக் காத்திருந்த சூரிய விதையை
மறைத்தவர் யாரோ- நம்
இறைவன்தானோ!

தங்குமிடமின்றியலைந்த
நரைமுகில்கள்
வாலிபம் கண்டதோயின்று
கருமையைத் தாமும் பூசி!

மழையுரசலில்
கலைந்தோடும் மண் வாசம்
மெல்ல - என்
சுவாசத்துள் குந்திக்கொள்ள!

விடியலின் சைகையைக் காட்டும்
சேவல்கள் கூட
இன்றேனோ கடமை மறந்து
நன்றாகத் தூங்க

எங்கே போயின
சலங்கையாய் சிரிக்கும் - அந்தச்
சிட்டுக்கள்

மரக் கொப்பில்
சொண்டு தேய்த்து சோம்பல் முறிக்கும்
பச்சைக் கிளிகள் கூட
காணோமேயின்று!

தலைகுனிந்தே - தன்
மேனி நனைக்கும் மென் மலர்கள்
மெல்ல முணங்குகின்றன
மெளனவலியால்!

இன்னுமதிகம் முளைக்கவேயில்லை
வண்ணக் காளான்கள் தரையை மறைத்தபடி!
நிசப்தத்தின் அரவணைப்பில்
நம்மவர்கள் மயங்கிக் கிடப்பதால்!

இத்தனைக்கும்

இருள் துளைத்து முளைவிடுமின்றைய
பௌர்ணமிக்காய்
விடுமுறைக்குள் சிக்கியதென்
பாடசாலைப் பொழுது!



-Jancy Caffoor -