About Me

2012/11/18

என் செய்வேன்!




நெஞ்சக் கூட்டின் சுருதியலைகளில்
மோதி ஓய்கின்றது
பெருமூச்சொன்று!

தொலைந்து போன நிஜங்களின்
சாம்பர் மேட்டின்...........
அக்கினிப்பூக்களாய்
எழுதுகோல்கள் உருமாறியதில்........

கற்பனைகள் கூட
வலியில் வெந்து
கருகிப் போனதோ!
கவியும் பஞ்சமானதோ!

இருந்தும்...............
மனச்சிறகசைத்து
விழிகளை விரும்பிய திசைகளிலெல்லாம்
கவிக்கருக்காய்
தூதனுப்புகையில்....................

நாடியுடைக்கும் யதார்த்தங்களால்
செந்நீர் கரைந்து..........
கன்னங்களைத் துடைக்கின்றன
கண்ணீராய்க் கசிந்து!

வெறுமை வெளிக்குள் பூத்தவென்
உயிரோ........
முடிவிலிச் சலனத்தால்...................
கருக்கட்டப்படாத  கனவுகளைத் தேடி
அலைகின்றது வீணாய்!

இப்பொழுதெல்லாம்
மௌனங்களோடு மட்டும் பேசியவென்
உதடுகள்..........
மானுட பாஷையை மறந்து போக.......

இது புரியாமல்............!

வெட்டியெறியப்பட்ட  என் புன்னகையையும்
வார்த்தைகளையும்.............
மீண்டும்
என்னுள்ளே நட்டிவிட............
கங்கணம் கட்டுகின்றனர்  நண்பர் குழாம்..........!

நட்புச்சிறையுடைத்தே........
தனி வழிதேடி............நானும்
மிரண்டோடினாலும்

பாறை நிழலுக்குள்ளும்
ஓரமாய்.............
துளிர்த்திருக்கும் பாசம் தாமென..............
மிரட்டுகின்றனர் ..........

ஐயகோ!
என் செய்வேன்...........



























3 comments:

  1. அருமை...

    யார் எது சொன்னாலும் தீர்மானிக்க வேண்டியது-முடிவு செய்ய வேண்டியது... நம் மனம் தான்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...தனபாலன்

      Delete

  2. Paramasivam Cyclesiva பயப்படாதிர்கள் நாங்கள் இருக்கிறோம் : )

    Kkvckckvkalaimahel Hidaya Risvi மின்விசிறிச் சுழற்சியில் சிக்குண்டுத்
    நடுங்கிக் காத்துக்கிடக்கின்ற
    என் தூக்கம் அறியாமலே!..

    Kalaimahan Fairooz பரீட்சை வினாப்பத்திரங்களை
    பத்திரமாய்ப் பார்க்கும்
    என் கரங்களுக்குள்ளிருந்து
    நழுவிவிடுகிறது
    ஆசிரியர் தினத்தில்
    மாணாக்கர் பரிசளித்த
    அந்த சிவப்புப் பேனா!

    என் ஏகபத்தினி
    என் இரத்தங்கள்
    மெய்ம்மறந்து
    சொப்பனத்தில்....!

    ஏதோ காலடிச்சத்தம்
    என் எண்ண அலைகளை
    வீசியடிக்கின்றன!
    காலையில்
    பள்ளிக்கூடத்தில்
    இராமாயணக் கதை சொன்னபோது
    இராமனின் வீரமும்
    மீசைமுறுக்கிய
    குகனின் வீரமும்பற்றி
    வீராப்பாய் சொன்னேன்....!

    மெல்ல மெல்ல
    மேலெழுகிறது சத்தம்...
    கூடவே
    நாய்களின் பன்றிக்கரைச்சல்
    எனையறியாமல்
    விடைத்தாள்கள் பறக்கின்றன!

    நானே கட்டிச்சொன்ன
    பேய்க்கதைகள்
    இப்போது எனக்குள் ஆட்டம்காட்டுகின்றன!
    கண்களை இறுக்கிக்கொள்கிறேன்
    அங்கே....
    கறுத்த...
    மிகக் கறுத்த உருவம்
    என் கழுத்து நெறிப்பதுபோலும்...

    மின்விசிறி வேறு
    பலமாக அடிக்கிறது
    வேறுநாட்களைப் போலில்லாமல்....
    மின்சாரம்
    அணைவதும் எரிவதுமாக....

    பயம் எனை ஆட்கொள்கிறது
    நான்
    நேற்று முந்நாள்
    பாரதியின்
    பாடலை மாணாக்கர்
    சுவைக்கும்படிச் சொன்னேன்...
    இப்போது......

    ஆ.... ஆ....
    ஆ..... ஆ....!
    சொல்லத் தயக்கம்
    தாரத்தை எழுப்பத் தயக்கம்
    காலடிச் சத்தம் நீள்கிறது
    சங்கிலிச் சத்தத்துடன் பிணைந்து....!

    ஆந்தைகளின் அலறல்
    எங்கேயோ குந்திரிக்கம் மணக்கிறது...
    மரணமொன்று நிகழ்ந்திருப்பதாக
    உள்ளம் பறைசாற்றுகிறது...

    கீழே நழுவிய பேனாவை
    எடுக்கத் தயங்குது உள்ளம்...
    அந்தப் பேனா மை
    எனக்கு
    காட்டேறிகளின் இரத்தமாக...

    ம்.....ம்....
    ம்..... ம்....
    கொஞ்சம் உரத்தகுரலில் நான்!
    பிள்ளைக்குப் பக்கத்தில்
    வந்து அமர்ந்துகொண்டதால்
    சத்தம் தாளாமல்
    வீறிட்டழுதது குழந்தை....!
    பசியாற்ற எழுந்தாள்
    என் பத்தினி....

    ஆகா! தெம்புபிறந்தது
    கொஞ்சம் கோப்பியுடன்
    என்னவள்....!
    முகத்தை அலசிக்கொண்டு
    மீண்டும்
    விடைத்தாள்கள் திருத்தும்பணியில்
    நான்....!
    ஆனால்.....
    கீழே இருந்த பேனா மட்டும்
    என் கரங்களுக்குள் இல்லை....

    ஆ..............!

    -கலைமகன் பைரூஸ்

    Sritharan Nadarasa beautiful one....

    Abubacker Sithick ha ha ha yellarukum intha moment varum

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!