About Me

2019/05/04

உள நெருக்கீடு


நம்பிக்கைகள்  சிதைக்கப்படும்போது  அதனை  மீள கட்டியெழுப்புவதென்பது சிரமமானதுதான். அடுத்தவர் வார்த்தைகளால் ௨ணர்வுகைளக் காயப்படுத்தும்போது நாம்  வெளிப்படுத்தும் மௌனம் பாரிய ௨ளநெருக்கீட்டைத் தீர்க்காவிட்டாலும்கூட நம்மைச் சூழ தற்காலிகமாக ௮மைதியையேனும் தோற்றுவிக்கக்கூடியது.

.
- Jancy Caffoor-
   05.04.2019


இருள் குமிழ்

இருளில் கரையும் தரையை
உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன
மின் விளக்குகள்

- Jancy Caffoor -
  04.05.2019

வாப்பா உங்களை நினைந்து

Jaffna Muslim: யாழ் - ஒஸ்மானியா கல்லூரியின் இலச்சினையை, வரைந்த ஒஸ...: - பரீட் இக்பால் - யாழ்ப்பாணம் சோனகதெருவைச் சேர்ந்த உசைன் சாய்பு முஹம்மது – சுலைஹா தம்பதியினருக்கு 1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 

- Jancy Caffoor -
  04.05.2019

எண்ணங்கள்

மனித வாழ்வின் தோற்றுவாய்களுள் தவிர்க்க முடியாத அம்சம் பிரச்சினை கள்தான். பிரச்சினைகள் வரும்போது அவற்றிலிருந்து விலகியிருத்தல் அப்பிரச்சனை தவிர்த்தலுக்கான பிரதான வழியாகும்.


கையில் அழகான ரோசா
இருந்தாலும்........
காயம் தந்த முள்ளையும்
ஓரப் பார்வையில் விழுத்தி விடுகிறது மனம்!

- Ms. Jancy Caffoor -
   05.04.2019

2015/09/13

புதிய மோட்டார் வாகனச் சட்டம்




நவீனத்துக்குள் நாடும் மக்களும் உள்வாங்கப்படும் போது அவர்களின் வாழ்க்கையும் வசதியும் அதிகரிக்கின்றது. இத்தாக்கத்தின் பிரதிபலிப்பிலொன்றுதான் வாகனங்கள் அதிகரிப்புக்கள். முறையற்ற வாகன நகர்வின் மூலம் ஏற்படுகின்ற வாகன விபத்துக்கள் மூலம் அதிகரிக்கின்ற விபத்துக்கள் இதற்கு சான்று பகிர்கின்றது.

13.09.2015 முதல் அமுலுக்கு வரும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் இந்நிலையை மாற்றுமா

 வாகனம் வைத்திருப்பவர்கள் இதனைக் கட்டாயம் படியுங்கள் !

சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் , அத்துடன் முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை தடுத்து  நிறுத்தும் அதிகாரமும் சாரதியின் உறுதிப்பத்திரம், வாகனத்தின் சகல ஆவணங்களையும் பரிசோதனை செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.  இது தவிர வாகனத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் தொடர்பாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அதிகாரம் உள்ளது. அதேவேளை, சாரதியின் அனுமதி பத்திரத்தை காவல்துறை அதிகாரி மூலம் கைப்பற்றப்படுமாயின்  14 நாட்களுக்கு அமுலில் உள்ள வகையில் தற்காலிக அனுமதி பத்திரமும் வழங்கப்பட வேண்டுமெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது..
-------------------------------------------
-------  தண்டப்பண விபரம்-   ----
-------------------------------------------
*****சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
*****புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
*****இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
*****வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 +
****** ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000
********அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
********3 முறைக்குமேல் அபராதம் விதித்தால்  2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும்.
********இதற்கு மேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமாக  ரத்துசெய்யபடும்.
******* வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

- Jancy Caffoor -

   09.12.2015