About Me

2020/06/20

இணையம்

வார்த்தைகள் சுருங்கிக் கொண்டதும்
இதயங்கள் விரிந்து கொண்டன
வாழ்க்கையுடன் ஒன்றித்துப் போனதாய்
கைக்குள் இணையம்

ஜன்ஸி கபூர்  


அனுபவக்கல்வியே தேவை

தன்னை  யறிதல் கல்வியென்றார் ஆன்றோர்/  
விண்  மண் இடைவினைப் புரிதலில்/
எண்ணும் எழுத்துக்களும் ஏடுகளை நிரப்ப/
கண் ஒளியில் அறியாமை  இறக்கும்/

அறிவால் கற்பவை வெறும் சொற்ககளே/
வெற்றிடங்களில் வீழும் விதைகள் போல/
வெறுமனே பயனற்றுப் போகும் செயலின்றி/
அறுந்த மணிகளாய் சிதறிக் கிடக்கும்/

சிரசோடு பொருந்தும் அறிவில் உயிர்ப்பில்லை/
கரமும் இதயமும் இணைந்திட்டால் செயலாகும்/
காந்தியும் சொன்னார் இயற்கையும் அழைக்கின்றதே/
காலத்தின் கல்வெட்டில் பதிவாகுமே அனுபவக்கல்வி/

பயன் குன்றிய கல்வி நமக்கெதற்கு/
பாரதியின் முழக்கத்திலும் மெய் யுண்டே/  
சந்ததி வழிக் கல்வி விழுமியங்களே/
சமூகத்தின் அச்சாணியாம் என்றும் தாங்கும்/

சூழும் கல்வியே சமுகத்தின் தேவைகளாம்/
வாழ்க்கையே கல்வி என்றே மொழிந்தார் ரூயி/
தொடர்கல்வியாய் தொடர்கின்ற அனுபவங்களே/
தொல்லையின்றி நம்மைக் காக்கும் தொழிற்கல்வியாம்/

இயற்கைச்சூழல் கற்றுத் தரும் இசைவாக/
இரசனையால் ஐம்புலனில் விரியுமே அனுபவங்கள்/  
தரிசனங்கள் காட்சிகளால் பிள்ளைகள் மனமும்/
கரிசனையுடன் விரும்பிக் கற்குமே எந்நாட்களும்/

ஞானத்துடன் வாழ்க்கையையும் கற்றிடவே/
அனுபவக்கல்வியே சிறந்ததென்றே/ 
நிறைவு செய்கின்றேன் தலைப்பினை/

ஜன்ஸி கபூர் - 19.06.2020

 கல்விப் புலத்தில் கனிந்த பழத்தின் கருத்து.
அனுபவக் கல்விக்கு ஆதாரம் அழகாகத் தருகின்றார்.
இந்தக் கருத்துகளை எடுத்து நோக்குவோம்.
நிலாமுற்றத்தில் முதல் கவியரங்குவென தலை நிமிர்ந்து பகிர்ந்தாலும் தக்க கருத்துப் பகிர்ந்தார்.
வாழ்த்துகள் கவிஞரே வருகைக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துகள்

நிலாமுற்றத்தின்
220 - வது
கவியரங்கத்தில்
அனுபவக்
கல்வியே சிறந்து என்று
கவிதையில் ஆயிரம்
சான்றுரைத்து
தாங்கள்
படைத்திட்ட கவிதைக்கு
நன்றி
வாழ்க தமிழ்
வாழ்க உங்கள்
தமிழ்பணி என்றே
வாழ்த்தி மகிழ்கிறது
நிலாமுற்றம்





2020/06/19

வழிகாட்டி


வழியறியாது தடுமாறும் விழியற்ற இளைஞனுக்கே/
விழியாகி வழிகாட்டும் ஊன்றுகோலாய் மாறும்/
அழகான கருணை யிங்கே தரிசிப்பாம்/
வளரும் பிள்ளைக்கோ இவன் வழிகாட்டியாம்/

வெள்ளைப் பிரம்போடு தானும் கைகோர்த்த/
வெள்ளை மனதின் நிழலு மிங்கே/
நல்ல பிள்ளைகள் வாழும் நம் பூமியில்/
உள்ளம் கசிகின்றதே மனிதத்திற்கு வயதுமில்லை/

பள்ளம் மேடும் தானறியாது நடக்கும்/
பாதையில் இடரும் துன்பம் கண்டதுமே/
இருண்ட உலகின் ஒளி விழியாய்/
விரும்பி வாழும் பிள்ளைக் குணம்/

அறமே என்றும் காத்து நிற்கும்/
வரமாய் அகிலம் போற்றி நிற்கும்/
சிறந்த தர்மமாம் பிறருக் குதவுதலே/
அருமையான வளர்ப்பென்றே உரத்துச் சொல்வேன்/

ஜன்ஸி கபூர் - 19.06.2020

 


தினமும் யோகா

பயிற்சி செய்தால் உளமும் திடமாகும்  
உயிர்க் கூடும் வாழ்ந்திடும் நலமாக
உடற்பயிற்சியும் யோகாவும் ஆரோக்கியத்தின் கண்களாம்
உறவுகளை மேம்படுத்தும் உற்சாகப் பண்களாம்
முறையாகச் செய்திட்டால் உடலும் சீராகும்
நடைமுறை வாழ்வும் கண்டிடும் மலர்ச்சி

ஜன்ஸி கபூர்