பெண்ணே....!மனித வாழ்க்கையானது பிறப்பு, இறப்பு எனும் எல்லைப்படுத்தலுடன் மட்டுப்படுத்தப்படக்கூடியது. நாம் இப் புவியில் பிறந்துள்ளோம் என்பதை ஏற்றுக் கொள்பவர்களாக நாமிருப்பினும் நம் பிறப்பு பற்றிய ரகஸியங்களை விஞ்ஞானம் கற்பவர்களைத் தவிர இன்னும் பலர் அறியாமலே உள்ளார்கள்.

பெண் இனப்பெருக்கத் தொகுதி
-------------------------------------------------


பெண் இனப்பெருக்கத்தொகுதியில் பின்வரும் பகுதிகளுண்டு

1. சூலகங்கள்                                              2. சூலகக்கான்

3. கருப்பை                                                   4. யோனிமடல்

சூலகங்கள்
-------------------
வாதுமை வித்து வடிவில் 1 சோடி காணப்படும்.

சூலக இணையங்களால் கருப்பையுடன் இணைந்து காணப்படும்.

மேற்பட்டை, மையவிழையம் எனும் 2 பகுதிகளால் ஆனது.

மையவிழையத்தின் வெளிப்புறம் மூலவுயிர் மேலணிப் படை காணப்படுகின்றது

இதில் பல்வேறுவகையான புடைப்புக்கள் காணப்படும்.
------------------------------------------------------------------------------

1. முதலான புடைப்பு                 2. துணையான புடைப்பு

3. கிராபியன் புடைப்பு                4. மஞ்சட் சடலம்

5. வெண்சடலம்


முதலாவது முதிர்ச்சியடையாத முதலான புடைப்பில் முதலான முட்டைக்குழியமும் ,  அதனைச்சூழ ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள புடைப்புக்களும் காணப்படும்.

இவை FSH னால் தூண்டப்படும். திரவங்களால் நிரப்பப்பட்ட பல சிறுபுடகங்களை உருவாக்கி துணையான புடைப்புக்களை உருவாக்கும்.

திரவங்களால் நிரப்பப்பட்ட துணையான புடைப்புக்களில் முட்டை பதிக்கப்பட்டு  அவை கிராபின் புடைப்பு எனப்படும்.
இவை இரு மென்சவ்வுகளால் ஆக்கப்பட்டுள்ளது

முதலான முட்டைக்குழியம் ஒடுங்கற்பிரிவு-1 ஐ அடைந்து
துணைமுட்டைக்குழியத்தையும் முதலாம் முனைவுடலையும்  உண்டாக்கும்.

இதன் போது நிகழும் சமனற்ற குழியவுருப்பிரிவு காரணமாக துணைமுட்டைக்குழியம் குழியவுருவைப் பெறும்.

கிராபியன் புடைப்பினுள் காணப்படும் துணைமுட்டைக்குழியத்தைச் சூழ ஆரைமூடிக்கலங்கள் காணப்படும்.


துணைமுட்டைக்குழியத்திற்கும், ஆரைமூடிக்கலத்திற்குமிடையில் ஜெலி போன்ற பதார்த்தம் காணப்படும்.

கிராபின் புடைப்புடைந்து துணைமுட்டைக்குழியத்தை வெளியேற்றும் போது மஞ்சட்சடலம் வெளியேறும்.

மஞ்சட் சடலம் சிதையும் போது நாரிழையங்களும், வெண்சடலமும் வெளியேறும்.

சூலகக்கான் (பலோப்பியன் குழாய்)
-------------------------------------------------
இதன் சேய்மையந்தம் புனலுருவாகவும் திறந்தும் காணப்படும். புனல் போன்ற பகுதியில் விரல் போன்ற அமைப்புக்கள் காணப்படும்.


மறு அந்தம் கருப்பையை ஊடுறுவிக் கருப்பைக் குழியில் திறக்கும்,


தொழில்
--------------
1. துணைமுட்டைக்குழியத்தைக் கொண்டு செல்லும்.

2. கருக்கட்டல் நிகழும்

3. முட்டைக்குழியத்தை கருப்பையை நோக்கிக் கொண்டு செல்லும்.                                    பலோப்பியன் குழாயில் முட்டை செல்லுதல்கருப்பை
-------------
அமைவிடம் -

இடுப்புக்குழியில் சிறுநீர்ப்பையிற்கும்,  பெருங்குடலிற்குமிடையிலுண்டு

பேரி வடிவம். முன்பின்னாகத் தட்டையாக்கப்பட்டுள்ளது.


கருப்பையானது 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன1. கருப்பை அடிக்குழி

2, உடல்

3. கழுத்து


கருப்பையானது 3 படைகளாலானது
--------------------------------------------------

1 . கருப்பை அகத்தோல்2. கருப்பை தசைப்படை3. கருப்பைச் சுற்று


தொழில்கள்
-----------------
1. முளையம் உட்பதித்தல்


2, முதிர் மூலவுரு  தங்கியிருப்பதற்கு இடமளித்தல்3. பிறப்பின் போது தசைச்சுருக்கத்தை ஏற்படுத்தல்யோனிமடல்
------------------

தசை செறிவான இப்பகுதியே உள், வெளிப்பகுதியை இணைக்கும்.

துளைக்கண்மையில் சீதச் சுரப்பிகள் காணப்படும்.


யோனிமடலின் தொழில்கள்
----------------------------------------

1. பிள்ளைப்பிறப்பிற்கான பாதை

2. சுக்கிலத்தைச் செல்ல விடும் பாதை


பெண் இனப்பெருக்கத்தொகுதியின் தொழில்கள்
-------------------------------------------------------------------

1. சூல் உருவாக்கம்2. விந்து வாங்குதல்3.முளையம், முதிர்மூலவுரு பாதுகாப்பு


4. குழந்தைக்கு போசணையும் பாதுகாப்பும்5. குழந்தை வளர்வதற்கான சூழல்


6. துணைப்பாலியல்பு விருத்தி

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை