About Me

2012/07/19

அறிவோம் எம்மை


கல்விசார் ஞாபகமூட்டல்
--------------------------------------
இப் பதிவை வாசிப்பதற்கு முன் உங்களுடன் நான் சில நிமிடங்கள் பேச வேண்டும் :



2012.07.21 ந் திகதி என் கல்விமாணிப் பரீட்சை- இரண்டாம் வருடத்திற்கான உயிரியல் வினாப்பத்திரத்தை எதிர்நோக்கிய நிலையில் நான் கற்ற விடயங்களை பரீட்சைக்கு ஆயத்தமாகும் பொருட்டான ஞாபகப்படுத்தலுக்காகவும், விஞ்ஞானப் பாடவிதானத்தில் இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவுமே இவ்விடயங்களைச் மிகச்சுருக்கமாக என் வலையப்பூவில் பதிவிட்டுள்ளேனே தவிர வேறெந்த தவறான நோக்கமுமல்ல என்பதைத் தெரிவிக்கின்றேன்...........!

கற்பித்தலின் போது இவ் விடயங்கள் விரிவுரை மூலம் மாணவர்களுக்கு விளக்கமாக கற்பிக்க முடியாத சங்கடம் எனக்கு ஏற்படுவதுண்டு. எனவே அவர்களுக்கு இவ்விடயங்கள் பரீட்சைக்கான வழிகாட்டலாய் அமையும்.

மனித வாழ்க்கையானது பிறப்பு, இறப்பு எனும் எல்லைப்படுத்தலுடன் மட்டுப்படுத்தப்படக்கூடியது. நாம் இப்புவியில் பிறந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்பவர்களாக நாமிருப்பினும் நம் பிறப்பு பற்றிய ரகஸியங்களை விஞ்ஞானம் கற்பவர்களைத் தவிர இன்னும் பலர் அறியாமலே உள்ளோம். 

ஓரினமானது தனது பாரம்பரீயங்களை தனது எச்சங்களை புதிய இனங்களுக்குப் பரப்பி, புதிய இனங்களை உருவாக்கும் செயற்பாடு இனப்பெருக்கம் எனப்படுகிறது. மனித இனப் பெருக்கமானது அகக்கருக்கட்டலாகவும், இலிங்கமுறை இனப்பெருக்கமாகவும் அமைந்துள்ளது. அதாவது ஆண், பெண் எனும் இலிங்கங்களின் இணைதலால் புதிய உயிரினம் பெண்ணில் பராமரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது இப்புவி வாழ்க்கைக்காக!



------------------------------------------
ஆண் இனப்பெருக்கத் தொகுதி
------------------------------------------
இது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. விதை
2. விதைமேற்றிணிவு
3. அப்பாற் செலுத்தி
4  வீசற்கான்
5. சிறுநீர் வழி



ஆண் இனப்பெருக்கத் தொகுதியானது  விந்துற்பத்தி, பெண் இனப்பெருக்கத்தொகுதியில் விந்து செலுத்துகை, ஓமோன் உற்பத்தி, சுக்கிலப்பாயம் உருவாக்கல், துணைப்பாலியல் உற்பத்தி போன்ற தொழில்களை மேற்கொள்கின்றன.

விந்துற்பத்தியின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக விதையானது விதைப்பையினுள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 - 2 பாகை வெப்பநிலை பேணல் உடலுக்கு வெளியே மேற்கொள்ளப்படுகின்றது.

விதையின் அமைப்பு பின்வருமாறு -
-------------------------------------------------
இது 800 வரையிலான சிறு சோணைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு சோணையும் 1- 4 வரையிலான சுக்கிலச் சிறுகுழாய்களைக் கொண்டுள்ளது. சுக்கிலச் சிறுகுழாயின் வெளிப்புறமாக மூலவுயிர் மேலணிக் கலங்களும், Sertoli கலங்களும் காணப்படுகின்றன. மூலவுயிர் மேலணிக் கலங்களில் பின்வரும் கலங்கள் காணப்படுகின்றன.



 1. விந்துப் பிறப்பாக்கும் கலங்கள்

            
 2. முதலான விந்துக்குழியங்கள்


 3. துணை விந்துக்குழியங்கள்    

                  
 4. விந்தாகு கலங்கள்



Sertoli கலங்களானது இவை பயணிப்பதற்குரிய பாதையையும், போசணையையும் வழங்குகின்றன.



சுக்கிலச்சிறுகுழாயின் இடைவெளிகளிற் காணப்படுகின்ற Laydig கலமானது தெஸ்தெஸ்திரோஜின் எனும் ஓமோனைச் சுரக்கின்றது.



விதைமேற்றிணிவு
---------------------------
இதன் தொழில்களானவை:-

1. தற்காலிகமாக விந்துற்பத்தி
2. விந்தின் அசைவைக்கும், விருத்திக்கும் உதவுதல்
3.சுக்கிலப்பாயத்தின் ஓர் பகுதியைச் சுரத்தல்

அப்பாற் செலுத்தி
------------------------
ஒவ்வொரு விதைமேற்றிணிவுடன் தொடர்புபட்டதாக 2 காணப்படும். இதன் முனைவில் விரிமுனையொன்றும் காணப்படுகின்றது. இது வீசற்கானில் திறக்கின்றன. அவ்வாறே சுக்கிலச்சிறுகுழாயின் கானும் வீசற்கானில் திறக்கின்றன. இவ் வீசற்கான் சிறுநீர்வழியிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வீசற்கான்
--------------
2 வீசற்கானும், சுக்கிலப்புடகக் கானும் முன்னிற்கும் சுரப்பியினூடாகச் சென்று ஆண்குறியையும் அதனூடாக சிறுநீர்வழியையும் அடைகின்றன.

ஆண்குறி
----------------
இது தசை செறிவானது.

இதன் தொழில்களாவன
----------------------------------
1. சிறுநீர் வெளியேற்றம்
2. யோனியினுள் விந்துக்களை விசிறுதல்.


ஆண் இனப்பெருக்கத் தொகுதியுடன் தொடர்பான சுரப்பிகளாவன!
----------------------------------------------------------------------------------------------
1. சுக்கிலப்புடகம்       2. முன்னிற்கும் சுரப்பி      3. கூபரின் சுரப்பி

சுக்கிலப்புடகம்
---------------------


இது 1 சோடி காணப்படுகின்றது. அப்பாற்செலுத்தியுடன் இணைந்து காணப்படும். சுக்கிலப்பாயத்தின் பெரும்பகுதியை இதுவே சுரக்கின்றன.

இதன் தொழில்களாவன
-------------------------------------
1. யோனிமடலில் காணப்படும் அமிலத் தன்மையை நடுநிலைப்படுத்தல்.
2. மசகிடல்
3.விந்திற்கான சக்திமுதல்கள்
4. விந்து அசைதல்

முன்னிற்கும் சுரப்பி
-----------------------------


இது சிறுநீர்வழியைச் சூழ, சிறுநீர்ப்பைக்கு நேர் கீழே காணப்படுகின்றது, சுக்கிலப்பாயத்தின் 20 % இதனால் சுரக்கப்படுகின்றது. பால் போன்ற நிறம் இதன் மூலமே பெறப்படுகின்றது.

தொழில்கள்
------------------
1. யோனிமடலின் அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தல்
2. விந்துக்களின் அசைவிற்கான ஊடகத்தை வழங்குதல்
3. மசகிடல்
4. சிறுநீர் வழியில் காணப்படும் அமிலத்தன்மையை நீக்குதல்

கூபரின் சுரப்பி
---------------------

பட்டாணியுருவான ஒரு சோடிச் சுரப்பியாகும். இது முன்னிற்கும் சுரப்பிக்கு கீழாகவும், சிறுநீரகத்தின் பக்கத்திற்கொன்றாகவும் காணப்படுகின்றன.

தொழில்கள்
--------------------
1. மசகிடல்
2. சிறுநீர்வழியில் காணப்படக்கூடிய அமிலத்தன்மையை நடுநிலையாக்கல்

சுக்கிலம் என்பது
-----------------------

விந்துக்களையும் துணைச்சுரப்பிகளின் சுரப்பிகளையும் உள்ளடக்கிய பாய்பொருளாகும். ஒரு தடவை இவை வீசப்படும் போது 2-5 மி.லீ சுக்கிலம் வீசப்படும். 1 லீற்றர் சுக்கிலத்தில் 20 மில்லியன் வரையிலான விந்துகள் காணப்படுகின்றன.

விந்தாக்கம்
----------------


இது சுக்கிலச் சிறுகுழாயில் நடைபெறும். இங்கு விந்துப்பிறப்புக்கலங்கள் (2n) இழையுருப்பிரிவடைந்து 2 கலங்களைக் கொடுக்கும். அவற்றுள் ஒன்று விந்துப்பிறப்பாக்கும் கலமாக மாற, மற்றையது முதல் விந்துக்குழியமாகக் காணப்படும்.

முதல் விந்துக்குழியம் ஒடுங்கற்பிரிவடைந்து - 1 துணை விந்துக்குழியத்தைத் தோற்றுவிக்கும்.

துணைவிந்துக்குழியம் ஒடுங்கற்பிரிவு-2 ஐ அடைந்து விந்தாகு கலங்கள் 4 இனைத் தோற்றுவிக்கும்.

ஒவ்வொரு விந்தாகு கலங்களும் 4 விந்துக்களை உருவாக்கும்.

விந்துக்களும், விந்தாகு கலங்களும் குழியவுருவை பெருமளவு இழந்திருக்கும்.

இவ் விந்துக்கள் சுக்கிலச்சிறுகுழாயின் உள்ளடக்கத்தை அடையும். ஆனால் மேற்பரப்பையடையும் போதே அவை இயக்கத்தன்மையை அடைகின்றது.

விந்துப்பிறப்பாக்கத்திற்கு எடுக்கும் காலம் 72 மணித்தியாலயங்கள்.

விந்தாக்கத்தில் ஓமோன்களின் பங்களிப்புக்கள்
-------------------------------------------------------------------
  • பரிவகக்கீழினால் GnRH ஓமோன் சுரக்கப்படும்.
  • இது முற்பக்க கபச்சுரப்பியினால் FSH, LH ஓமோன்கள் சுரப்பதைத் தூண்டுகின்றன.
  • FSH ஆனது Sertoli ஓமோனைத் தூண்டும். இது விந்துப்பிறப்பாக்கத்தைத் தூண்டும்.



Sertoli ஆனது அதிகளவு விந்துற்பத்தியை தடுப்பதற்காக Inhibin ஓமோனைச் சுரக்கும்.

LH ஓமோனானது Leydig கலங்களைத் தூண்டி Testosterone இனைச் சுரக்கச் செய்யும். இது விந்துப்பிறப்புக்கலங்களை வளர்ச்சி பெறச் செய்வதுடன், விந்தின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும்.


தெஸ்திரோஜன் ஓமோனின் கட்டமைப்பு
---------------------------------------------------------
விந்தின் அமைப்பு
-------------------------


  • தனிக்கலம்,  நுண்ணிய அமைப்பு
  • தலை,  நடுத்துண்டு, வால் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது
  • தலையானது வட்டவடிவமானதாகவும், தடடையானதாகவும் காணப்படும்.
  • தலையில் கரு (தந்தை வழி இயல்பைக் கடத்த), உச்சிமூர்த்தம் (விந்து முட்டையை ஊடுறுவ உதவுதல் ) காணப்படும்.
  • தலைக்கும் நடுத்துண்டுக்குமிடையில் கழுத்துக் காணப்படும். இதில் 1 சோடி புன்மையத்திகள் உண்டு.
  • புன்மையத்தியிலிருந்து எழும் அச்சிழை வால் பகுதி வரை நீண்டு சவுக்குமுளை போன்று அசைவிற்கு உதவும்.
  • வீசலின் பின்னர் விந்தின் ஆயுட்காலம் 48 மணி தொடக்கம் 72 மணி வரை.
  • விந்தாக்கம் ஆண்களின் பிறப்பிலிருந்து ஆயுள் வரை நடைபெறும்.
- Ms.A.C.Jancy -


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!