உயிர்.........
கருத்தரித்தல் என்பது கருக்கட்டலில் இருந்து பிறப்பு வரையிலான காலமாகும். இது 266 நாட்களாகும் ( 38 வாரங்கள்)

இறுதியான மாதவிடாய் காலத்திலிருந்து 280 நாட்கள்
(40 வாரங்கள்) கணிக்கப்படுகின்றன.கர்ப்பம் தரித்தலுக்கான ஆரம்ப அறிகுறிகள்
------------------------------------------------------------
1. மாதவிடாய் தடைப்படல்
2. வாந்தி

3. முலைகள் பருமனடைதல்
4.சில வகை உணவுகளில் விருப்பு
5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

கர்ப்பமடைந்திருப்பதை அறியும் பரிசோதனைகள்
-----------------------------------------------------------------------
1. முதலாவது மாதவிடாய் நின்ற காலத்திலிருந்து 10 வது 14 வது நாட்களில் செய்யப்படும் hCG பரிசோதனை....பெண்களில் மலட்டுத் தன்மை ஏற்படக்காரணங்கள்
----------------------------------------------------------------------------
1. சூல்கொள்ளல் தடைப்படல்

2.பலோப்பியன் குழாய், கருப்பை, கருப்பைக் கழுத்து ஆகிய பகுதிகள் சேதம்     அடைந்திருத்தல்.

3..விந்தினுடைய பிறபொருளெதிரிகள் இருத்தல்.ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படக்காரணங்கள்
-----------------------------------------------------------------------
1. தன்நிர்ப்பீடனம் ஏற்படல் (Autommunity)

2.சுக்கிலத்தில் குறைந்த எண்ணிக்கை விந்துகள் காணப்படல்

3.அதிகளவான அசாதாரண விந்துக்கள் காணப்படல்

4. விந்துக்களின் அசையும் திறன் குறைவு.

5. விந்துக்களின் வாழ்க்கைக் காலம் குறைவாகக் காணப்படுதல்கருக்கட்டலின்போது பெண்ணின் பலோப்பியன் குழாயின் மேலந்தத்தில் காணப்படும் துணைமுட்டைக்குழியம் மீது விந்து மோதும். அப்பொழுது விந்தின் தலைப்பகுதியும், நடுத்துண்டும் முட்டைக்கலத்தின் உட்பகுதியிற்கு ஊடுறுவும். இந்நிலையில் துணைமுட்டைக்குழியம் உயிர்ப்படைந்து ஒடுங்கற்பிரிவடைந்து விந்தின் கருவிலுள்ள குரோமோசோம்களுடன் இணைந்து கருக்கட்டலை நிகழ்த்தும்..

இக் கருக்கட்டப்பட்ட முட்டை நுகம் எனப்படும்..
                                                 முசுவுரு நிலை
இந்நுகம் 30-36 மணித்தியாலங்களில் பிளவடைந்து முசுவுரு (Morula) நிலையை அடையும்.

3 நாட்களுள் இம் முசுவுரு பலோப்பியன் கான் வழியாக கருப்பையை அடையும். அங்கு இக் கலங்கள் மீள ஒழுங்குபடுத்தப்பட்டு பந்து போன்ற நிலையை அடையும். இது அரும்பர் சிறைப்பை (Blastocyst) எனப்படும்.

இவ் அரும்பர் சிறைப்பை திரவத்தால் நிரப்பப்பட்டு அரும்பர்க்குழியை (blastocoel) உருவாக்கும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட கலத்திணிவு முதிர்மூலவுருவாக
மாற்றப்படும்.

போசணையரும்பர்களின் சடைமுளைகளால் 7-14 நாட்களுக்குள் அரும்பர் கருப்பை அகத்தோலுடன் உட்பதிக்கப்படும்.
 தாயிற்கும் சேயிற்குமிடையிலான போசணைப் பரிமாற்றத்திற்கான முன்னோடியாக இவ் போசணையரும்பர் சடைமுளையுதவுகின்றது..இவற்றிலேற்படும் மாற்றம் காரணமாகவே சூல்வித்தகம் உருவாக்கப்படுகின்றது.இது சூல்வித்தகத்தையும் மூலவுருவையும் இணைக்கின்ற கொப்பூள் நாண் ( Umbilical) ஆகும்.

             பிறப்பின் பின்னர்  கொப்பூள் நாண் அறுக்கப்படல்
.


இவ்வாறு விருத்தியடையும் மனித முளைய விருத்தியை 3 மும்மாதப் பிரிவுகளாக நோக்கலாம்.
---------------------------------------------

முதலாம் மும்மாதம் (First trimester)
-----------------------------------------------
6-7 நாட்களில் கருக்கப்பட்ட முளையம் கருப்பையை வந்தடையும்.

4ம் வாரமளவில் அங்கங்கள் உருவாகும்.

கண்கள் விருத்தியடையும்

இதயம் உருவாகி இதயத்துடிப்பு ஆரம்பமாகும்.

3ம் மாத முடிவில் கண்கள்,மூக்கு, வெளிக்காது காணப்படும்

விரல்களில் நகங்கள் தோன்றும்.

குருதிக்குழாய்கள் உருவாகியிருக்கும். இதயத் துடிப்பை அறியலாம்

தலை பெரிதாகக் காணப்படும்.

நிறை 30 கிராம்


              8ம் வாரம்                                              
-
இரண்டாம் மும்மாதம் (4,5,6 மாதங்கள்)


நீளம் 25- 35 செ.மீ

நிறை 550 - 750 கிராம்

கண் மடல்கள் மயிர்களைக் கொண்டிருக்கும்

மனித முக இயல்பு

தலை ஓரளவு பெரிதாகவும் உடல் தோல் சுருங்கியும் இருக்கும்

தலையில் மயிர் முளைத்திருக்கும்


என்புகள் உருவாக்கப்பட்டிருக்கும்மூன்றாம் மும்மாதம் (9 ம் மாத முடிவில்)
----------------------------------------------------------
நீளம் 50 செ.மீ

நிறை 3000 கிராம்

உடல் மயிர்கள் உதிரும்

விரல் நகம் நீண்டிருக்கும்

தலை சிறிதாகும்

விதைப்பையினுள் விதைகள் இறங்கியிருக்கும்

உடல் நன்கு விருத்தி பிறப்புச் செயற்பாடு (Birth Process )
  ---------------------------------------------
முதிர்மூலவுருவின் தலை கருப்பைக் கழுத்தை நோக்கித் திரும்பும்.

முதிர்மூலவுருவின் தலை அளவிற்கு கருப்பைக் கழுத்து விரியும்.

கருப்பை தசை சுருங்கும்

வலுவான சந்த அசைவுகளால் பிறப்புக்கானை நோக்கி (யோனிமடல்) முதிர்மூலவுரு தள்ளப்படும்.

10-45 நிமிடங்களின் பின்னர் சூல்வித்தகம் ) கொப்பூள்) நாண் வெளியேற்றப்படும்.

இதன் போது 350 கன சென்ரிமீற்றர் குருதி வெளியேற்றப்படுகின்றது.


                                        பிறப்பிற்கு அண்மித்த நிலைகுழந்தை பிறந்த பின்னர் கொப்பூள் நாண் அறுக்கப்படல்
உண்மையில் ஓர் தாயின் கருவறை சுமக்கும் கர்ப்பத்தின் மாற்றங்கள் வியப்பளிக்கக் கூடியவை. தான் சுமக்கும் கருவை நோய் நொடியண்டாது இப் புவிக்கு ஆரோக்கிய மனிதராக வழங்கத்துடிக்கும் அந்தத் தாய்மைக்கு நிகரேது

----------------------------------------------------------------
கருத்தரிப்பைத் தடுக்கும் சில முறைகளாவன
----------------------------------------------------------------
                                  Contraceptive Pills                                                      Various Color of Condoms

                                          Couple Selecting Contraception


                                         Couple in Bed


                                          Family PlanningYoung Teacher Standing in front of the blackboard...talking about itMinipill இது Progesterone ஐ கொண்டுள்ளது. இதனால் கருப்பைக்கழுத்தில் காணப்படும் சீதம் அதிகரித்து உட்பதித்தல் தடைப்படும்
Intrauterine devices (IUD)         Intrauterine device (IUD)
இம் முறையில் கருப்பையில் சிறிய சாதனம் வைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்படும் கருப்பை மாற்றங்களால் உட்பதிதல் தடுக்கப்படுகின்றது

                                                           

                                                           Periodic abstinence

              கருக்கட்டல் நடைபெறக்கூடிய காலத்தை தவிர்த்தல்              Norplant  இதுவோர் நவீன சத்திர சிகிச்சையாகும். இவ்வில்லைகள் ஆறு மேற்புயத்தின் தோலின் கீழாக சிறிய சத்திர சிகிச்சை மூலம் உட்பதிக்கப்படும்    Tubectomy  - இது பலோப்பியன் குழாய் வெட்டப்பட்டு குழாயின் முனை இறுக்கி கட்டப்படும். இதனால் முட்டை கருப்பையை அடையாது.


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை