பேபி அஸ்கா !


புன்னகை மழையில் - என்
சோகம் கரைத்திடும் நேச மழையிவள்!

அவள் மல்லிகைச் சிரிப்பு - என்னுள்
கோடி சுகத்தின் சேமிப்பு !

தன் மழலைச் சொல்லில்...........
யாழ் நெய்யும் அதிசய ராகமிவள்!

என் வாழ்க்கையை வசீகரிக்கும்
அழகான மழலைக்காரி!

இயற்கையே மெய் மறக்கச் செய்யும்
வண்ண நிலவுக்காரி !

என் நகர்வின் அச்சாணியாய் ......
உருமாறிக் கிடக்கும் அழகுக்காரி!

அஸ்கா குஞ்சு................!

இப்பொழுதெல்லாம் ................
இவள் மழலைக்குள் தொலைந்தே
அந்நியமாகின்றேன் எனக்குள் நானே!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை