புவியைத் தாங்கி நிற்கும் தூண்கள் வளிமண்டலமாகும். ஒட்சிசன் அணுக்கள் மூன்று விசேட முறையில் ஒன்றிணையும் போது ஓசோன் படை உருவாகின்றது. இது படை மண்டலம், புவியின் மேற்பரப்பிலிருந்து 15 தொடக்கம் 40 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.
இவ் வோசோன் படையை 1920ம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உலகிலுள்ள உயிர்கள் நிலைத்திருக்க இவ்வோசோன் படை அவசியமாகின்றது. சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் புற ஊதாக் கதிர்களை புவியுறிஞ்சாமல் தடுக்கும் கவசமாக இது தொழிற்படுவதால், மனித உயிர்களுக்கு பல தீங்குகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
1974 ம் ஆண்டு சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகள் காரணமாக ஓசோன் படை தேய்வடைவதாகக் கண்டறிந்தனர்.
உண்மையில் புவியின் வளிமண்டலத்தின் அதிகளவு இடத்தைப் பிடித்திருக்கும் இவ்வோசோன் படைச் சிதைவினால் புவிச்சூழலின் வளிமண்டலத்தில் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. கண் நோய்கள் மற்றும் சுவாசத் தொகுதி சார்பான பிரச்சினைகளும் தோல் புற்று நோயும் ஏற்படுகின்றன.
புற ஊதாக் கதிர் வீச்சினால் தாவர உற்பத்தி வீழ்ச்சியடைகின்றன. சமுத்திர உணவுவலைத் தொடக்கியான பிளாந்தன்கள் பாதிப்பினால் உணவுற்பத்தி குறைந்து மீன்கள் உற்பத்தியும் அழிவடைகின்றன.
ஓசோன் படைத் தேய்வுக்கு, மனித உற்பத்தியாக வெளிவரும் ஓசோனைச் சிதைக்கும் இரசாயனப் பொருட்களே காரணமாகின்றன. இவ்விரசாயனங்கள் விவசாய, கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக குளோரோ புளோரோ காபன், காபன் தெட்ரா குளோரைட் , ஐதரோ குளோரோ புளோரா காபன் போன்றவை மேல் வளிமண்டலத்தினை அடைந்தவுடன் சக்தி வாய்ந்த அணுக்களான குளோரின், புளோரின் போன்றவற்றை பகுதி பகுதியாக வெளியிடுகின்றன. இவ்வணுக்கள் தாம் சேதப்படாமல் பிற பொருட்களைச் சேதப்படுத்தும். எனவே இவ்வாறான பொருட்கள் வெளியேற்றப்படாமல் தடுப்பதன் மூலம் ஒசோன் சிதைவைக் கட்டுப்படுத்தலாம்.
1980 ஆண்டுகளில் மிகையாகப் பயன்படுத்தப்பட்ட ஹலோனின் பாவனையின் அதிகரிப்பால், ஓசோன் படையில் துவாரமும் ஏற்படுத்தப்பட்டது.
இதனழிவுகளின்பால் கவனம் செலுத்தி ஓசோன் படையைப் பாதுகாப்பது நமது கடமையாகும். இதன் மூலம் உலகில் வாழும் சகல மக்களையும் காக்க முடியும்.
1985 ல் ஓசோன் படைப் பாதுகாப்புக்காக வியன்னா மாநாடும், 1987 ல் ஓசோன் சிதைவைத் தடுக்கும் பொருட்கள் தொடர்பாக மோன்றியல் சாசனமும் வெளியிடப்பட்டது. இச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை 192 ஆகும். இதனடிப்படையில் இலங்கை உட்பட பல நாடுகள் CFC,ODS ,HCFC போன்ற பாவனையைக் கட்டுப்படுத்தின.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஓசோன் சிதைவை மட்டுமல்ல, புவி வெப்பமுறாது பாதுகாக்கவும் முடிகிறது..
விளக்கமான பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஎன்னை வளப்படுத்தும் உங்கள் பின்னூட்டங்களுக்கு எனது நன்றி............தனபாலன்
Delete