வீசும் காற்றில் விழுந்திருக்கும் இலை
அழவில்லை...........
அழிந்துவிட்டேனென!
உரமாகும் மகிழ்வில்
உரத்துச் சிரிக்கின்றது!
ஒவ்வொரு துன்பத்துக்குள் நன்மையுண்டு. அதை ஏனோ நாம் காலதாமதமாகித்தான் உணர்கின்றோம்!
--------------------------------------------------------
எட்டப்பன் கெட்டவன்தான்
கூடிக் கெடுத்தான் தன்னினத்தை!
இருந்தும்.............
கட்டபொம்பன் புகழ் பரப்பும்
சுட்டியும் அவனே!
நம்மை வீழ்த்துவதாய் நினைத்து செயற்படும் எதிரியின் விமர்சனங்கள் கூட நம்மை முன்னேற்றும் துடுப்புக்கள்!
----------------------------------------------------
என்னையே எடுத்துச் சென்றாய்
நான் திருப்பிக் கேட்பது உன் னிதயத்தை மட்டுமே!
------------------------------------------------------------------------------------------ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!
--------------------------------------------------
மௌனங்கள் வலிக்கலாம்........
ஆனால்...........
அதன் வலிமையில்தானே
உணர்வுகள் தம் மனதை மீளத் திரும்பிப் பார்க்கின்றன!
வலி கூட அழகான மொழிதான்!
------------------------------------------------------
அழகான ரோசாவை
ஆசை கொண்டு பறித்த போது........
விரலோரம் வழிந்தது
பூவின் நிறம் மெல்ல!
முள்ளோ...................
கள்ளமாய் சிரித்தது!
ஆசையும், அழகும் துன்பத்தின் வடிகால்கள். பலருக்கு பட்ட பின்னர்தான் புத்திக்குள் எட்டுது!
------------------------------------------------------
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை!
மாறும் உலகிற்கேற்ப ...............
தன் ஒழுக்க நெறி பிசகாமல் வாழ்வோர்
ஏற்றம் பெறுவார் எந்நாளும்!
------------------------------------------------------
தன் குறைகளையெல்லாம் தான் திருத்தார்
பிறர் நிறைகளைத் தானும் அறியார்...........
இவரெல்லாம் நன்மக்கள் எனின்
பாரெல்லாம் தலைகீழாய் சுழலும்!
-------------------------------------------------------
ஆரயா.........சேட்டை விடுறது!
ஹன்ஸிகாவைக் காணவில்லை!
- Ms. Jancy Caffoor -
எல்லாவற்றையும் விட காலதாமதமாகி உணரும் கருத்து அருமை...
ReplyDeleteநன்றி
Delete