About Me

2020/10/22

முகக்கவசம்

 கொரோனா கற்றுத் தந்திருக்கும் தற்போதைய வாழ்க்கையில் நாம் முகக் கவசத்திற்கு பழக்கப்பட்டிருக்கின்றோம். முகக்கவசம் கட்டாயம். இதனைக் கடந்து செல்ல முடியாது.

அன்று....

ஒரு சில நாட்களின் முன்னர் ..............

பொருட்களை வாங்குவதற்காக வைத்தியசாலை வீதிப் பக்கம் சென்றிருந்தேன். அது ஒரு பெட்டிக் கடை.   ஒரு வயோதிபர் அதனை நடத்திக் கொண்டிருந்தார். தள்ளாடும் வயதிலும் அவரின் உழைப்பிற்கான முயற்சி என்னைக் கவர்ந்திருந்தது. 

ஒருவர் முகக் கவசம் ஒன்றை விலை கேட்டு வாங்கினார். அதன் விலை 15 ரூபா (துணியல்ல). ஆனால் இதன் விலை  வித்தியாசமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அதனை வாங்கியவர் சென்று விட்டார். அருகில் நின்றவர் அந்த வயோதிபரிடம் கேட்டார்.

'ஐயா.  இது மற்றைய இடங்களில் கூட விலைக்கு விற்கிறதே'

என்ற கேள்விக்கு அந்த வயோதிபப் பெரியவர் சிரித்தவாறே,

'இது நோய் வராம அணியிறது. இதில எனக்கு கொள்ளை லாபம் வேணாம் தம்பி'

அந்த நறுக் பதில் இன்றும் என் மனதில் சுழன்று கொண்டிருக்கின்றது. 

பணம் .........பணம்........என சுயநலமாகச் சிந்தித்து பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய மனிதர்களுள் இந்த ஐயா உயர்வாக எனக்குள் தெரிய ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!