About Me

2020/10/24

தென்குமரிக் கவிதைக்களம்

 1.அன்பென்ற நதியிலே அனைத்துயிரும் இணையுமே

------------------------------------------------------------------------------------ 

குப்பைகளைச் சேகரிக்கும்/

......குட்டிப் பையன்.

குணக்குன்றாய் உயர்கின்றான்

......குவலயத்தின் மலரவன்/


குறையேதுமில்லை அன்பிற்கே

......குளிர்கின்றன மனங்களே/

குன்றா அழகின்

......குறியீடாய் இம்மலர்கள்/

---------------------------------------------------------------------------------------------------------

2. எதிர்பார்ப்பு
--------------------
ஏறெடுத்தும் பார்க்காத
......ஏழைகளின் வாழ்வில்/
ஏக்கமே சொத்தாம்
.....ஏனிந்த விதியோ/
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்
.....எட்டிடுமோ நிம்மதியும்/
எழுகின்ற போராட்டங்கள்
.....எரிக்கின்றதே கனவுகளை/
எதிர்காலம் ஒளிர்ந்திடுமோ
.....எந்தன் வாழ்வோரம்/

-------------------------------------------------------- 

3.கனவு கண்ட காதல்
------------------------------------
காதல் விழிகளில் 
........அன்பினைத் தடவி/
கனிந்திடும் உன்றன் 
........நினைவினில் உயிர்த்து/

காத்திருக்கும் என்றன் 
.......மனதை உனதாக்கி
கனவிலும் சுமக்கின்றேன் 
.......கண்ணியக் காதலை/

காணும் காட்சிதனில் 
.......கருவாகி விரிந்திடும்
கன்னி நீயே 
.......காதலின் மூச்சடி/

ஜன்ஸி கபூர் - 25.10.2020


------------------------------------------------------------------------------------------------------
4. உணர்வுகள்

ஜன்ஸி கபூர் - 26.10.2020
----------------------------------------------------------------------- 

5.நானும் நீயும்
-------------------
வண்ண நிலாவும்
.......வான் மேகமுமாக
வடிவம் கொண்டோம்
.......வாழ்வுச் சோலையினில் 

வண்ணமுமானாய் ஆருயிர்க்குள்
........வாசமுமானாய் நினைவுக்குள் 
வசந்தத்தின் நுழைவாயிலில்
........வந்தே யமர்ந்தோமே 

பூவும் நாருமாக
.........பூரித்தே இணைந்தோம் 
பூவிழி நீயே
.........பூத்தாய் சிந்தைக்குள் 

அன்பின் வருடலுக்குள்
..........ஆசையில் இணைந்தோம் 
அழகாய் ஈர்க்கப்பட்டே
..........அமிர்தம் சுவைத்தோம்

என் நடைதனில்
.........எழில் நிழலானாய்
எனக்குள் உயிர்த்தே
.........என் பிம்பமுமானாய் 

ஜன்ஸி கபூர் - 26.10.2020

------------------------------------------------------------------
6. அழகிய பூமகளே வலிகள் ஏனோ//
ஏனோ உன்றன் விழிகளில் சோகம்//
சோகம் துரத்திடு கன்னங்கள் சிவக்கிறதே//
சிவக்கின்ற இதழ்களில் புன்னகையும் மலரட்டுமே//
மலரட்டும் வாழ்வும் மகிழ்ந்திடு மனமே//
மனமே வாழ்க்கை உன் கைகளிலேயே//

ஜன்ஸி கபூர் - 26.10.2020
-------------------------------------

7. மதம் கொள்ளும் மானிடர் வாழ்வில்/
நிதம் இல்லை நிம்மதிதானே/
பதம் பார்க்கும் வலியும்/
வதம் செய்தே துன்புறுத்துவார் பிறரும்/

ஜன்ஸி கபூர் - 29.10.2020


------------------------------------------------------------------ 
9. தெம்மாங்கு
---------------------
கழனியும் செழித்திருக்க 
......களிப்பும் மனதிலாட/
கரங்களின் அசைவினில் 
.....நாற்றுக்களும் சிரிக்கின்றதே/

கன்னியர் பாடிடும் 
.....தெம்மாங்குக் கானத்திலே/
கவலைகளை மறந்தே 
.....கால்பதிக்கின்றனர் வயலில்/

உழவனின் உழைப்பிங்கு 
......உயிர்க்கின்றதே உவகைக்குள்

ஜன்ஸி கபூர் - 30.10.2020



---------------------------------------------------------------- 
10.எத்தனை முகங்கள் எங்களைச்சுற்றி
-----------------------------------------------------------------
விடிகின்ற பொழுதினில் 
...........விடையில்லா முகங்கள்/
விருப்பும் வெறுப்புமாக 
..........விளையாடுகின்றதே வாழ்வில்/
உணர்வினை மறைத்தே 
.........உறவென நீண்டே/
உள்ளத்தில் வட்டமிடுகின்றன 
........உவப்பில்லா முகமூடிகள்/

ஜன்ஸி கபூர் - 31.10.2020

-------------------------------------------------------------- 
11. அந்தாதிக் கவிதை
------------------------------ 
நிழலெனப் படரகின்றாய் என்றன் நினைவுகளில்/
நினைவுகளில் உயிர்க்கின்றாய் இனிக்கின்றதே மனமும்/
மனமும் நித்தமும் உனையே உச்சரிக்கின்றதே/
உச்சரிக்கின்ற இதழ்கள் தித்திக்கின்றதே அருகாமைக்குள்/
அருகாமைக்குள் அணைக்கின்றாய் சொந்தமே நீதானே/
நீதானே என்றன் மூச்சுக்காற்றின் வாசம்/
வாசமே வீழ்கின்றேனே உன்றன் விழிப்பார்வைக்குள்/

ஜன்ஸி கபூர்  - 31.10.2020

 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!