About Me

2020/11/14

சீவக சிந்தாமணி

 

விருத்தப்பாக் காப்பியமாம் சீவகசிந்தாமணி நமக்கே/

உயிர்த்ததுவே திருத்தக்கதேவ முனிவரின் கருவாகி/

ஏமாங்கதம் நாட்டின் பெருமன்னன் சச்சந்தன்/

ஆருயிர் மனைவியை ஆசைக்குள் பொருத்தியதால்/

அமைச்சனின் சூழ்ச்சிக்குள் இழந்தார் மணிமுடியை/

தானும் இறப்பதற்குள் தன்குலம் காத்திடவே/

வான்வழி மயிற்பொறியில் நிறைசூலி விசயையை/

வழியனுப்பி வைத்தே இன்னுயிரும் நீத்தார்/


இடுகாட்டில் பிறந்த மன்னன் வாரிசை/

இன்முகத்துடன் தனதாக்கினான் கந்தக்கடனெனும் வணிகனே/

அரும்பிய மொட்டும் விரிந்தது சீவகனாக/

தோற்றப்பொலிவுடன் ஆற்றலும் அழகுமாக மிளிர்ந்தவனை/

ஏற்றனரே காரிகைகள் எண்மர் தம்வாழ்வாக/

எட்டுத்திக்கும் போற்றவே வாழ்ந்தான் இல்லறத்தில்/


பல்தார மணமும் பணமும் புடைசூழ

நல்லுலகை அரசாண்டான் நீதிநெறியினில் சிறந்தே

தந்தையைச் சிதைத்தவனைத் தானு மழித்தே 

தாயையும் கண்டறிந்தே இணைத்திட்டான் வாழ்வினிலே


முப்பது ஆண்டென விரிந்த ஆட்சியை/

முடிவுறுத்தினான் மக்கள் ஆட்சிக் கரங்களினுள்/

நிலையற்ற வாழ்வினில் நிலைத்திடாதே செல்வமும்/

அலைகின்ற  மனதை அமைதிக்குள் அடக்கவே/

தானும் ஏற்றான் துறவற வாழ்வினை/

சீவகனின் அகவாழ்வை இயம்பிடும் சீவகசிந்தாமணி/

முன்னோடிக் காப்பியமே கவிப்புலமை நெஞ்சங்களுக்கே/


ஜன்ஸி கபூர்- 14.11.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!