About Me

2013/04/24

ஸ்வரம்


ஒவ்வொரு ஆணுக்குள்ளும் வெளியே தெரியாத ஒரு குழந்தை மனசு உண்டு. அந்த மனச கண்டுபிடிச்சு, அதை அன்பால் நனைக்கிற பெண், அந்த ஆணையே வெற்றி கொள்கின்றாள்.
--------------------------------------------------------------------------------------------------


குழந்தை ஓர் கண்ணாடியாக இருப்பதனால்தான் பிறர் செய்வதைப் போல் தாமும் செய்ய முயற்சிக்கின்றார்கள்..
அவர்களின் தவறுக்கு தண்டனை வழங்கும் போது, நமக்கு நாமே தண்டிப்பதைப் போன்றது. ஏனெனில் குழந்தை வலியை உணறும் முன்னரே, ஏன் தண்டித்தோம் எனும் வலி நம்மைப் பிறாண்ட ஆரம்பித்து விடுகின்றது.
---------------------------------------------------------------------------------------------------



நம்மைக் கடந்து போகும் வாழ்க்கை, எல்லைகளைக் காட்டும் வெறும் மைல்கல் அல்ல...மீளத் திரும்ப முடியாத அற்புதமான கணங்கள்........
அழகிய தருணங்கள்..!!
------------------------------------------------------------------------------------------------




உலகம்.......நம்மைச் சுமந்து கொண்டிருக்கும் அற்புதமான படைப்பு!
இவ்வுலகின் ஒவ்வொரு நிகழ்வுகள் தொடர்பாகவும் மனிதன் இன்னும் ஆராய்ந்துதான் கொண்டிருக்கின்றான். ஆரம்ப காலத்தில் உலகத்தை 4 யானைகள் தாங்கிக் கொண்டிருப்பதாக, அறிவியல் அறிவு வளராத முன்னோர்கள் தமது கற்பனையைச் சுமந்தார்கள்....

அந்தக் கற்பனையில் உலகம் இப்படித்தான் தாங்கப்பட்டிருக்குமோ!
     ---------------------------------------------------------------------------------------------    


----------------------------------------------------------------------------------
 

பிறரின் உணர்ச்சிகளை உன்னிடம் வெளிப்படுத்த அனுமதி கொடுக்காதே. ஏனெனில் அவர்கள் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த எதுவேண்டுமானாலும் செய்யலாம்.    
-----------------------------------------------------------------------------------------------  

-------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------

நம் கனவுகளை வெளியேற்றி விட்டு
யதார்த்தங்களை உணரச் செய்வதே வாழ்க்கை!






         

2013/04/21

போய் வருகின்றேன்


போய் வருகின்றேன்
சுனாமி கூட சுக அலையாக!

ஆழியின் சுழற்சிக்குள்
அடங்கத் துடிக்குது  தேகம்!

குரல்வளை நனைக்கும் நீர்த்துளிகளால்
சுவாசவோரம் சிதையத் துடிக்குது

இதோ!

இன்னும் சில வினாடிகளில் முற்றாக
இடம்பெயறலாம் ஒட்சிசன் என்னிலிருந்து!

திமிங்கிலம் குதறிய எச்சங்கள்
கரையோரம் வந்து ஒதுங்கலாம்!

சூரிய உதயத்தில் கூட
என்னுருவம் மறைந்தும் போகலாம்!

காத்திருக்கின்றன கடற்பூக்கள் அஞ்சலிக்காய்
பாத்திருக்கின்றன அலைகள் புரட்டியெடுக்க!

வா!
எனக்காக!!

ஒரு துளி உப்பை கடலில் நீயும் சிந்த
காத்திருக்கின்றேன்
பாதி மூச்சையிழுத்து!

- Jancy Caffoor-
     21.04.2013

நவீன காதல்


உறவினர் வருகை கண்டு
பூரித்த மனசு கொஞ்சம்
மறந்ததே அவள் நினைவின்று!

துடித்திருப்பாளோ
அருகிலிருந்தால் கடித்து மிருப்பாளோ

"செல்"லுக்கினி விடுமுறையென்று
சொல்லிக் கொண்டாள் என் மனசோரம்!

அவள் வதை கூட தேன்கூடென்றும்
கள்ளின் மொழியென்றும்
இறுமாற முடியவில்லை

செல்லமென்றவள்
சொல்லிக் கொள்ளாமலே மறைந்து விட்டாள்

பேசா மடந்தை பேசாமலே
வாசமிழக்கச் செய்தாளோ கனவுகளை!

போடீ!

வழியனுப்பி வைத்தேன்
மீள என்னிடம் வராதேயென்று!


- Jancy Caffoor-
     21.04.2013

மனசோரம்



வீசும் காற்றில் விழுந்திருக்கும் இலை
அழவில்லை...........
அழிந்துவிட்டேனென!

உரமாகும் மகிழ்வில்
உரத்துச் சிரிக்கின்றது!

ஒவ்வொரு துன்பத்துக்குள் நன்மையுண்டு. அதை ஏனோ நாம் காலதாமதமாகித்தான் உணர்கின்றோம்!
-------------------------------------------------------- 
எட்டப்பன் கெட்டவன்தான்
கூடிக் கெடுத்தான் தன்னினத்தை!
இருந்தும்.............
கட்டபொம்பன் புகழ் பரப்பும்
சுட்டியும் அவனே!


நம்மை வீழ்த்துவதாய் நினைத்து செயற்படும் எதிரியின் விமர்சனங்கள் கூட நம்மை முன்னேற்றும் துடுப்புக்கள்!

---------------------------------------------------- 
என்னையே எடுத்துச் சென்றாய்
நான் திருப்பிக் கேட்பது உன் னிதயத்தை மட்டுமே!
------------------------------------------------------------------------------------------


ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!
-------------------------------------------------- 


மௌனங்கள் வலிக்கலாம்........
ஆனால்...........
அதன் வலிமையில்தானே
உணர்வுகள் தம் மனதை மீளத் திரும்பிப் பார்க்கின்றன!

வலி கூட அழகான மொழிதான்!
------------------------------------------------------ 


அழகான ரோசாவை
ஆசை கொண்டு பறித்த போது........
விரலோரம் வழிந்தது
பூவின் நிறம் மெல்ல!
முள்ளோ...................
கள்ளமாய் சிரித்தது!

ஆசையும், அழகும் துன்பத்தின் வடிகால்கள். பலருக்கு பட்ட பின்னர்தான் புத்திக்குள் எட்டுது!
------------------------------------------------------ 


மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை!
மாறும் உலகிற்கேற்ப ...............
தன் ஒழுக்க நெறி பிசகாமல் வாழ்வோர்
ஏற்றம் பெறுவார் எந்நாளும்!
------------------------------------------------------ 


தன் குறைகளையெல்லாம் தான் திருத்தார்
பிறர் நிறைகளைத் தானும் அறியார்...........
இவரெல்லாம் நன்மக்கள் எனின்
பாரெல்லாம் தலைகீழாய் சுழலும்!
------------------------------------------------------- 



ஆரயா.........சேட்டை விடுறது!
ஹன்ஸிகாவைக் காணவில்லை!


- Ms. Jancy Caffoor -