About Me

2014/07/25

தேன்



மருத்துவக் குணமுள்ள தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது?
-------------------------------------------------------
"உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால்,

மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற மேற்படி குளுக்கோஸ் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து  திரவமாக வௌிப்படுகின்றது அதுவே தேன்.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். அவ்வாறே தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தையும் எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர்.

- Jancy Caffoor-

சிலேடை




சிரிக்க சிந்திக்க சிலேடை
---------------------------------------
ஒருமுறை ரெட்டியாரும், ஊற்றுமலை அரசரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தலை நிறைய பூவுடன் அரசி அங்கே வந்தாள்.

அவளைக் கண்டதும் "தங்கச்சி வந்தியா" என அன்பாக ரெட்டியார் கேட்டார்.

அவர் அப்படி கேட்டதும் அரசனுக்கு அது பிடிக்கவில்லை. அரசியை தங்கச்சி என விளிக்கின்றாரே என அரசர் முகவாட்டம் அடைந்தததை புலவரும் காணத் தவறவில்லை.

அரசியாரே! தங்கள் தலையில் சூடியிருப்பது தங்கச் சிவந்தியா எனக் கேட்டேன்.....

என பேச்சை மாற்றினார் ரெட்டியார்.....


அனாதை மனம்



அன்பைச் சிந்தி
ஆரோக்கியம் காத்து
இன்முகத்தினுள் தம் துன்பம் மறைத்து
ஈகைவாதிகளாய்- இரத்த
உறவுகளால் கைவிடப்பட்ட
பெரியவர்கள்

அனாதைகளுக்கும்கூட
எங்கோ ஓர் சத்திரமுண்டு!
அங்கும்கூட புது உறவுகள்
கிடைப்பதுமுண்டு!

- Jancy Caffoor-
      25.07.2014

முகநூல் எண்ணங்கள் - 6



சம்மட்டி.....
கல் பிளக்கும் - ஆனால்
பஞ்சு பிளக்காது.....!

வெயில்.....
மலையை உடைக்கும்  - ஆனால்
குடையை உடைக்காது!

வாழ்வில் வரும் துன்பம்
மனதைக் கரைக்கும் - ஆனால்
தன்னம்பிக்கையைக் கரைக்காது!

உண்மையில்.....

தடைகளை உடைத்து
கண்ணீரை உலர்த்துவதே
தன்னம்பிக்கையின் செயலாய் உள்ளது!

----------------------------------------------------------------------

வெறும் பாறையாய்தான் இறுகிக் கிடந்தேன்...
உருக வைத்தாய் உன் பார்வையால்....
இறுதி வரை தொடருமோ
மாசற்ற உன் னன்பு!

---------------------------------------------------------------------

சில சந்தர்ப்பங்களில் ஒருவரின் .....

மௌனம் என்பது நிசப்தங்களின் ஓசையல்ல...
சொல்ல முடியாத உள்ளத்துணர்வுகளின் அலறல்!

இதனைப் புாிதல்......
அன்பின் அங்கீகாரம்!

பிாிதல்.....
புரிந்துணர்வின்மையின் அகங்காரம்!

----------------------------------------------------------------------

முடியாது என்பது பலவீனர்களின் அறியாமை!
முடியும் என்பது வெற்றியாளர்களின் நம்பிக்கை....!

இந்த நம்பிக்கைதான் ....
என் தன்னம்பிக்கையின் ஆணிவேர்!

----------------------------------------------------------------------

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்....

நம் மனம் விரும்பும் பட்சத்தில் தடைகள்கூட உடைந்து
வழி விடும்....

விரும்பாத பட்சத்தில் ...

வழிப்பாதைகள் கூட தடைக்கல்லாய் மாறி
நம்மை நிறுத்தும்!

நம் செயல்களின் ஆணை யாவும்
மனதிலிருந்தே!
ஆனால் நாமோ...
தோல்வியின் இறுக்கத்தில் விதியை சபிக்கின்றோம்
நம் சதியை மறைத்து!

------------------------------------------------------------------------

அன்பு ஒரு உணர்வல்ல.....
இதயம் பேசும் மொழி!

ஆனால்....

அது பலருக்குப் புரிவதில்லையாதலால்
பிரிவைத் தேடிப் போகின்றனர்...

------------------------------------------------------------------------

நம் வசம் இருக்கின்றபோது பெறுமதியற்று போகின்ற ஒவ்வொன்றினதும் பெறுமதி அதன் இழப்பின்போதுதான் வலியாய் மனதைக் குடைகின்றது!