நட்பென்பது மனித உணர்வுகளின் அழகிய மொழி. அகத்தின் இனிமையான வரிகள். காலங்களும் மனித தோற்றங்களும் மாற்றம் பெற்றாலும் கூட மனிதன் தனக்குள் செதுக்கி வைத்திருக்கும் இந்த நட்பின் ஆழம் மட்டும் குறைவதில்லை. நல்லவர்களை நட்பாக்கி கொள்வது அவசியம். இல்லாவிட்டால் மனம் எனும் தூய்மைக்குள் அசுத்தங்கள் ஆட்சிபீடம் அமைத்து விடும்.
நல்ல நண்பர்களின் தெரிவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றார்கள்...
"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி) நூல் : புகாரி (2101)
எம் முகநூல் நண்பர்களில் நல்லவர்களை மாத்திரம் எம்முடன் தக்க வைத்துக் கொள்வோம்...