நேற்று காலையில இருந்தே வாசல்ல காகம் கரைஞ்சிட்டே இருந்தது.
"சூ சூ"
துரத்தினாலும் போகல. அதப் பார்த்து அஸ்கா கேட்டாள்.
"ஏன் காகம் நம்ம வீட்டப் பார்த்து கரையுதுனு"
நானும் பதில் சொல்லனும் எனும் கடமை உணர்ச்சியில சொன்னேன்
"காகம் கரைஞ்சா யாரும் வீட்டுக்கு வருவாங்களாம்"
யாரோ நான் சின்னப்புள்ளயில சொன்னது இன்னும் ஞாபகத்தில கரைய சொன்னேன்
இந்தக் காலத்து புள்ளங்கள சமாளிக்கிறதே ரொம்பக் கஷ்டம்
பட் பட்டுனு அடுத்தடுத்த கேள்விகள்
யாரு? எப்போ? அப்படினு தொடர்ந்த கேள்வி கடைசிக் கேள்வியோட முடிஞ்சுது இப்படி
"அப்ப யாரும் வராட்டி"
சந்தேகத்தோடு கேட்டாள்.
நானும் சொன்னேன்.
"யாரும் வராட்டி இனி காகம் கரைஞ்சா யாரும் வரமாட்டாங்க என்று நினைப்போம் சரியா"
நான் சொன்னதைக் கேட்டு மெல்லத் தலையாட்டினாள்.
பி.கு
-------
இனி யாரும் காகம் கரைந்தால் யாரும் வருவாங்க என்று சொன்னால் நம்பவே மாட்டேன்.நீங்க!
(என்னதான் நாம் விஞ்ஞான உலகத்தில நம்மைப் பதித்தாலும்கூட இப்படியான மூடநம்பிக்கைகள், எதிர்வுகூறல்களை மனசும் நிராகரிக்காமல் நம்பிக் கெட்டுப்போகுது)
-Jancy Caffoor-
01.04.2015
-Jancy Caffoor-
01.04.2015