வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளால் சிக்கல் நிறைந்ததாக வாழ்க்கை மாறுகிறது. சகிப்பு தன்மை இல்லாமையால் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது.
சகிப்புத்தன்மை என்றால் என்ன ?
நான் நானாகவும், நீ நீயாகவும் இருப்பதும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதும் சகிப்பு தன்மையின் முகங்களாகின்றன. இப் பூமியில் நாம் ஒவ்வொருவரும் வாழத் தகுதி உடையவர்கள். நம் வாழ்க்கை நம் வசம். இதனை அற்ப காரணங்களுக்காக அடுத்தவரிடம் அடமானம் வைக்க நிச்சயம் நாம் இடமளிக்க கூடாது .நமது அடையாளம் தொலைந்து போகுமானால் நமது செயல்களும் வார்த்தைகளும் பெறுமதி இல்லாமல் போய் விடும் . நம் வாழ்வின் சரிவை தடுத்து நிறுத்த நாம் நம்மை காக்க வேண்டும். நம் நாவின் புனிதத்தை பேணவேண்டும். அடுத்தவருடனான சகிப்பு தன்மையை நல்லுறவை பேண வேண்டும்.
"பொறுத்தார் பூமி ஆழ்வார் " என்பார்கள்.
நன்மை கிடைக்கும் என்றால் நமது பொறுமையும் சகிப்பு தன்மையும் சிறந்ததே. அடுத்தவருக்கு மகிழ்வு வழங்கி, நமது சந்தோஷத்தையும் உறுதிபடுத்த சகிப்பு தன்மை அவசியமாகிறது. நம்மை ஏற்றுக்கொள்ளவோர் மத்தியில் நமது சுயம் பேணும் சகிப்புத்தன்மை நமது வாழ்வின் முக்கிய பண்பாகின்றது
- Ms.A.C.Jancy -
08.05.2019