About Me

2019/05/18

வழி தெரியா வலி

நாகரீகம் விண் முகடு தொட எத்தனிக்கும் போதெல்லாம் பல மனிதர்கள் இங்கு மனிதம் துறந்து கீழ்நிலை புள்ளியாகி விடுகிறார்கள். மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகள் முதன்மை நிலையில் பேசுபொருளாக மாறிவிடுகின்றது காலம் அனுபவங்கள் மூலமாக  வாழ்க்கையை கற்று  தந்து கொண்டிருந்தாலும் கூட  நாமோ அனுபவங்களை புற உறிஞ்சி பாடங்கள் கற்றுக் கொள்ளாமல் வெறுமனே வெளிப்படுத்தும் நிழல்களாவே மாறி வருகின்றோம்



 தான் எனும் அகங்காரம்  மனிதர்களின்  மனிதத்தை உறிஞ்சி விட்டதா ? குருதி நிறம் மறந்து வேற்று வாசிகள் போல் நடந்து கொள்ளும்  கொடுமை எல்லாம் இந்த பூமியில் வேரூண்டி வருகின்றது. இன்று பல மனித மனங்களை சுயநலம் எனும் போர்வை ஆக்கிரமித்து அடுத்தவர்களின் வெறுப்பாளர்களாக  மாற்றிக்  கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் மனசில் இனம் புரியாத வலியை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகள் உருவாக்கி கொண்டிருக்கிறன. சொந்த பூமியில் சோக வாழ்க்கையே தலை விதியாக நம்மை புடம் போட்டுக் கொண்டிருக்கிறன.    வாழ்க்கையே தோற்று போன பிரமை. வறண்டு போன பூமியின் எச்சமாய் போனதோ மனசு. ஈரலிப்பு இன்றி சோர்ந்து போய் துவண்டு கிடக்கிறது. 
.
வாழ்க்கை போராட்டங்களால் சிதைந்து போன மக்கள் மனங்களில் இன்று புன்னகை மறைந்து விட்டது. பிறப்பிடம் அந்நியமான பிரமை . விடியலும், இருளும் வந்து போகும் காலச்சக்கரத்தில் வாழ்க்கை வெறும் நிகழ்வாக மாறி கொண்டிருக்கிறது. உணர்வுகள் எல்லாம் வெறும் சம்பிரதாயங்களாக மனதோடு ஒட்டி கொண்டிருக்கிறதே தவிர உணர்வூட்டங்களாக இல்லை. நிச்சயமற்ற வாழ்வில் நம்மை கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியற்று மாறி விடுகின்றது . 
.
நாம் இறக்கும் வரை வாழத்தான் வேண்டும். வாழ்க்கை நமக்கு இப்போதெல்லாம் வெறும் பேசு பொருளாக மாறி விட்டதே தவிர மானசீகமான உணர்வு அல்ல .
.
-Jancy Caffoor-
18.05.2019

2019/05/08

சகிப்புத் தன்மை

Image result for சகிப்புத்தன்மை

வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் ஏற்படக்கூடிய  முரண்பாடுகளால் சிக்கல் நிறைந்ததாக வாழ்க்கை மாறுகிறது. சகிப்பு தன்மை இல்லாமையால் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க  வேண்டி உள்ளது.

சகிப்புத்தன்மை என்றால் என்ன ?

நான் நானாகவும், நீ நீயாகவும் இருப்பதும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதும் சகிப்பு தன்மையின் முகங்களாகின்றன. இப் பூமியில் நாம்  ஒவ்வொருவரும் வாழத்  தகுதி உடையவர்கள். நம் வாழ்க்கை நம் வசம்.  இதனை அற்ப காரணங்களுக்காக அடுத்தவரிடம் அடமானம் வைக்க நிச்சயம் நாம் இடமளிக்க கூடாது .நமது அடையாளம் தொலைந்து போகுமானால் நமது செயல்களும்  வார்த்தைகளும் பெறுமதி இல்லாமல் போய் விடும் .  நம் வாழ்வின் சரிவை தடுத்து நிறுத்த நாம் நம்மை காக்க வேண்டும். நம் நாவின் புனிதத்தை பேணவேண்டும்.  அடுத்தவருடனான சகிப்பு தன்மையை நல்லுறவை  பேண வேண்டும்.

"பொறுத்தார் பூமி ஆழ்வார் "  என்பார்கள்.

நன்மை கிடைக்கும் என்றால் நமது பொறுமையும் சகிப்பு தன்மையும் சிறந்ததே.  அடுத்தவருக்கு மகிழ்வு வழங்கி, நமது சந்தோஷத்தையும் உறுதிபடுத்த சகிப்பு தன்மை அவசியமாகிறது. நம்மை ஏற்றுக்கொள்ளவோர் மத்தியில் நமது சுயம் பேணும் சகிப்புத்தன்மை நமது வாழ்வின் முக்கிய பண்பாகின்றது

- Ms.A.C.Jancy -
     08.05.2019

அஸ்கா - சஹ்ரிஸ் -ஆக்கம்

ஒரு பிள்ளையின் இயல்பு வாழும் சூழல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது .அந்த வகையில் எங்க வீட்டு சின்ன ராணிகள் , அஸ்கா , (Grade 5) சஹ்ரிஸ்  (Grade 2) என்னை போலவே கவிதை எழுத ஆவல் கொண்டு படைத்த ஆக்கம் இது.
அவர்கள் வளர்ந்து இதை வாசிக்கும் போது கிடைக்கும் அந்த மகிழ்வை நானும் நுகர வேண்டும் .....

                                                                   

அஸ்கா
------------

அழகு நிறைந்த பொம்மை.
உயிர்  இல்லாட்டியும்   உடம்பு  உள்ளது.
மென்மையான பஞ்சுவால் ஆனதே
அழகான அருமையான பொம்மை..............
.
கடையில் அழகழகாய் அலுமாரியில் இருக்கிறது பொம்மை!
 அதன் அழகு எல்லோரினதும் மனதில் மகிழ்ச்சியை தருகிறது  சின்னஞ்சிறியதில் இருந்து பென்னம் பெரியது வரை உள்ளதே பொம்மை ......
கண்ணை சிரிக்க வைக்கும் ஆற்றல் உள்ளதே பொம்மை
.
மனதில் உள்ளவற்றை சொல்ல வைக்கும் ஆற்றல் உள்ளதே பொம்மை
சிறுவர்களுக்கு விளையாட விருப்பம் உள்ளதே பொம்மை
சிறுவர்களுக்கு பரிசாக போவதே பொம்மை.......
பொம்மை எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை தருகிறது !
.
பொம்மையின் அழகை நாம் ரசித்த வாழ வேண்டி உள்ளது
பொம்மையை நீ வாழ்க!
பொம்மையை நீயே வளர்க !!





------------------------------------------------------------------
                                சஹ்ரிஸ்
------------------------------------------------------------------


அழகு சஹ்ரிஸ் ......
அவள் நல்லவள்.
நன்மைகளே செய்வாள்.
அன்பானவள்.
அப்பாவி சனத்துக்கு உதவுவள்...
 நான் வளர்ந்து பெரியவள் ஆனால் விஞ்ஞானியாக போக எனக்கு புடிக்கும். எனக்கு ஜன்னியையும் உம்மம்மாவையும் புடிக்கும்.
நான் அவர்களின் பிள்ளையாக இருக்கோணும்
நான் அவர்களின் செல்ல புள்ளையாக இருக்க வேண்டும் என்று  நான் கேட்டுக்கொள்கிறேன்.
 நன்றி



-Jancy Caffoor-

சஹ்ரிஸ்

மேகக் கீறலிடை மின்னும்
வெண் முத்தோ இவள்...
சாமம் விழித்து வாசம் தூவும்
வெண் மல்லிகையோ .....
.
வானவில் பிழிந்த வண்ணச் சாரல் இவள்...
தேன் சிந்தும் வாச மலர்  இவள் ...
கானமிசைக்கும் குயில் இவள் ...
பண்ணிசைக்கும் மூங்கில் இவள் ...
.
தங்க மீன்கள் இவள் விழியோரம்
ஏழு தாண்டா அரும்பிவள் ...
குறும்பாய் சிந்தும்  அமிர்தம் இவள்...
புன்னகை நெய்யும் ஒளியும் இவள்!
.