எனக்கொரு நண்பர் இருந்தார். அவரும் ஆசிரியர்தான். இலக்கிய ஈடுபாட்டுடன் கூடிய வேடிக்கைப் பேச்சுக்கு அவர் சொந்தக்காரர்.
அவர் அழகானவர்...நடிகர் சரத்பாபுவின் சாயல் ஆனால் மூக்குக் கண்ணாடி அவரிடமில்லை. ஒருநாள் செமினார் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது , அவர் சின்னத்தாடி வைத்திருந்ததைக் கண்டேன்.
"என்ன, தாடியெல்லாம் வச்சிருக்கிறீங்க, காதல் தோல்வியான்னு கேட்டேன்"
சிரிச்சுக் கொண்டே கவிதையொன்று சொன்னார்
(இது அவர் இயற்றினதா இல்லையான்னு தெரியல)
'ம்ம்
இதயத்தை தாடி என்றேன்
தர மறுத்தாள்....
அந்த தாடியோ இப்ப என் கன்னத்தில
ஒட்டிக்கிட்டுது"
அவர் பதில் சொன்ன விதத்தைக்கேட்டு நானோ சிரிக்க, அவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்க
அன்று ..............
அவர் சொன்ன விசயம் ஒன்று இன்னைக்கும் மலைப்பா இருக்கு. அந்த இலட்சிய இளைஞர் செய்த தியாகம் என்ன தெரியுமா.
அப்போது அவருக்கு வயது 25, அழகில்லாத, வறுமைப்பட்ட திருமண வாய்ப்பே இல்லாத 45 வயதுப் பெண்மணியைத் துணிந்து திருமணம் செய்தார்.
வாழ்க்கையை ஈஸியா நினைக்கிற இந்த மனசு எத்தனை ஆண்களுக்கு வரும்! இன்று வரைக்கும் அந்த தம்பதியினர் ரொம்ப சந்தோஷமாக வாழுறாங்கள்.
அன்பே மிகப் பெரிய மகிழ்ச்சி!
16.06.2019