About Me

2020/06/01

கருவூலம்


கருவூலம் நிரம்புகின்றது அரச நிதிகளால்
பொருளாதாரம் உயர்கிறது நாடும் சிறக்கிறது
சுரண்டல் ஒழித்து அறம் ஓங்குகையில்
நேர்மையான அரசென்று நிர்வாகம் சிறக்கின்றது

ஜன்ஸி கபூர் 

நினைவின் ஓடைகள்



நினைவோடையில் நனைகையில் சுகமான ஈரங்கள்!
கனவோரங்களில் உயிர்க்கின்றன தினம் இதமாக!

அலைகள் உருட்டும் நுரைகள் பிடுங்கி
கரையில் தைத்த கோலம் அழிகையில்
வெடித்த அழுகை யிப்போ வெட்கத்தில்!

மண் வாசனை நுகர்ந்து
நெடு நேரம் மழைதனில் நனைந்து
சளி பிடித்த அவஸ்தையும்
அழியாத மூச்சுத் திணறலாய் இன்றும்

காற்றோடு மோதியெழும் வண்ணக்கலவைகளின்
சிறகடிப்பும் எனக்குக் கவிதைதான்

எட்டு வயசில் காலெட்டா ஈருளிளியோட்டி
பூமி தொட்ட காயங்கள்  வடுக்களாய்

நினைவு ஓடைகளில் கலந்திருக்கும் அதிர்வுகள்
காலச்சுழியில் ஓயாத அலைகள்
நெஞ்சம் சுமக்கும் அழகிய அனுபவங்கள்

ஜன்ஸி கபூர் 

வாழ்க்கைப் பாடங்களாய்


மாசற்ற பசுமைக்குள் மாண்பான காட்சி/
சிந்தையைச் செப்பனிட பொன்னான நேரமிது/

வெள்ளை இறக்கைக்குள் இல்லை கள்ளமே/
வாழ்க்கைப் பாடமாய்  வாத்துக் கூட்டமே/

அறநெறி தளம்பா இந்த அணிநடை/
அகத்தினில் பல உண்மைகள் உரைக்கும்/

பாதைகள் பல தெரிந்தும் குழப்பமில்லை/
தலைமைத்துவமும் சமூக இடைவெளியும் குழம்பவில்லை/

குழுவாய் பணி செய்தல் நன்றென்றும்/
அழகாய் கற்றுத் தருகின்றன வாழ்க்கையை/

ஆறறிவு மாந்தர் தொலைத்த பண்புகள்/
ஐந்தறிவின் வாழ்க்கை அடையாளங்களாய் இங்கே/

- ஜன்ஸி கபூர்-  

2020/05/31

அறப்பணி



அறப்பணி செய்வோம் அன்பின் ஊற்றாய்
அவலங்கள் களைந்தே நலம் கொடுப்போம்
இதயங்கள் மகிழ ஈகை பகிர்வோம்
நற்பணிகள் செய்தே ஞாலம் காப்போம்

ஜன்ஸி கபூர்