2020/06/02
சிக்கிய மீன்கள்
விண் தொட்டு விளையாடும் மேகங்கள்
குளத்தில் பிம்பம் தேடும் மலைகள்
பசுமைச் சிரிப்பில் பாய்ந்தோடும் குளம்
குள நீரோட்டத்தில் மீன்கள் வேட்டை
பிள்ளைகள் வீசிய கைவலை நான்கில்
சிக்கிய மீன்களை நெஞ்சோரம் அணைத்தே
பசிக்கு இரையாக்கும் அவசரம் ஆனந்தம்
விளையாட்டு வயதிலும் பக்குவம் தானிது
மீன்களோ துடிப்பிழந்து துயரோடு போக
சாதித்த வெற்றிக் களிப்பில் பிள்ளைகள்
மதிய மீன்கறிக் குழம்பின் வாசம்
இனி பரவும் குளக்கரை ஓரம்
ஜன்ஸி கபூர்
மனிதத்தின் இழுக்கு
இகழ்ச்சி செய்தல் மனிதத்தின் இழுக்கு
புகழ வாழ்தல் வெற்றிப் பண்பே
குற்றம் காண்போருடன் உறவும் தீதே
சுற்றம் போற்றும் வாழ்க்கை நன்றே
ஜன்ஸி கபூர்
புகழ வாழ்தல் வெற்றிப் பண்பே
குற்றம் காண்போருடன் உறவும் தீதே
சுற்றம் போற்றும் வாழ்க்கை நன்றே
ஜன்ஸி கபூர்
உயிரைக் காப்போம்
தொற்றுக்கள் கண்டால் உருகும் மெழுகாய்//
வருத்தும் நோய்க்கு மருத்துவம் செய்தே//
உயிரைக் காக்கும் மருத்துவர் மாண்பால்//
உன்னத வாழ்வை காத்தே வாழ்வோம்//
இரவு பகலறியா மருத்துவ சேவையில்//
இறப்பைத் தள்ளும் வலிமையும் உண்டு//
இழுக்கே உயிருக்கு நோய் வருதலாம்//
ஒழுக்க வாழ்வில் ஆரோக்கியம் பேண//
உடலைப் பேணி உயிரைக் காப்போம்//
காத்த உயிரால் உறவுகளோடு மகிழ்வோம்//
தொல்லைப் பிணியின் வலியை நீக்க//
வருமுன் காப்போம் மரணம் வெல்வோம்//
அளவோடு உண்டால் நலமாய் வாழலாம்//
உதட்டுப் புகை உயிருக்குப் பகை//
மது போதை சுவாசத்திற்கு அவஸ்தை//
உணர்ந்தால் வாழலாம் உயிரைக் காக்கலாம்
ஜன்ஸி கபூர்
பசுமைக் குடைகள்
விண் நீண்டு மண் படர்ந்து//
வான்மழை தேடி வரட்சி கொல்லும்//
நிழல் போர்த்தி மண்ணுயிர் காத்து//
உஷ்ணம் உறிஞ்சும் வெப்பக் குடைகள்//
மரங்கள் பூமியின் பசுமைக் குடைகள்//
மண் பிணைத்தே வளம் சேர்க்கும்//
ஆகார மளித்தே ஆரோக்கியம் சேர்க்கும்//
காற்றிலே கரைந்தே மாசுக்களை உறிஞ்சும்//
பூவாகி கனிந்தே அழகாய்ப் புன்னகைக்கும்//
இலைகள் உதிர்த்தும் தளிர்த்தும் வளர்ந்து//
நலம் தரும் விருட்சங்களை நாமே//
சாய்க்கின்றோம் பட்டமரமாய்
வீழ்த்துகின்றோம் தனிமையில்//
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Posts (Atom)