About Me

2020/06/17

இன்னொரு தாயாய்

 இருண்ட மேகம் மழையின் வாசத்தில்/
இறுக்க முகம் இளகிய பாசத்தில்/
சொற்களில் கண்டிப்பும் கண்களில் கனிவுமாய்/
காத்திடும் இன்னொரு தாயே அப்பா/

ஒழுக்கமும் அறிவும் வாழ்வின் மொழிகளாம்/
அழகாகச் சொல்லியே அனுபவமாவார் வாழ்வினில்/
அருகிலிருந்தால் தொல்லையே புத்தி நினைக்கும்/
தொலைவானால் விழிகள் ஏங்குமே அருகாமைக்கே/

பிஞ்சுப் பருவத்தில் இணைத்திட்ட கரங்கள்/
தஞ்சமாகித் தொடரும் தன் ஆயுளுக்கே/
அறியாத வயதில் பதித்திடும் தடங்களில்/
உரியாதே அன்பின் நிழல் உயிர்க்குமே/

ஜன்ஸி கபூர்  




2020/06/16

வாழ்வின் உயர்ச்சி

குளிர்ச்சி மேகங்கள் மழையாய் பூத்திட்டால்
வளரும் விருட்சங்கள் பசுமையில் செழித்திடும் 
களிப்பால் உழைப்பும் உயர்வைத் தொட்டிடும்
மலர்ச்சியும்  வாழ்வில் நிலையாய் ஊன்றிடுமே

ஜன்ஸி கபூர் 

கூடா நட்பு

கூடா நட்பின் மலர்ச்சி
தேடி தரும் இகழ்ச்சி

 

நீரைத் தேடும் உயிர்

தாவி யோடும் மேகங்கள் பிழிந்தே/
தூறல்கள் வீழுமே மனதும் பூக்குமே/
ஈரம் கசியும் காற்றில் நனைந்தே/
மரங்கள் மகிழுமே வாட்டம் தீருமே/

பாறை உருகும் வெயிலின் வலியில்/
தரைகள் உடையுமே தளிர்கள் சிதையுமே/
நிழலாய் வீழும் விருட்சக் குடைகள்/
அழிந்தே போக அகிலம் உடையுமே/

வரண்ட மண்ணும் உடைக்கும் வெடிப்பில்/
வேரும் மோதுமே பாரும் சாயுமே/
விண்ணும் கதறும் வெம்மை தணிக்க/
கண்கள் குளிருமே  மழையும் வீழுமே/

நீண்டு யர்ந்த கிளைகள் மோதி/
இருண்ட கொன்றல் மின்னல் வெட்டுமே/
இயற்கை உயிர்த்து பஞ்சம் நீங்க/
நீரைத் தேடும் உயிர்கள் வாழுமே/

ஜன்ஸி கபூர்  
  •