About Me

2020/06/17

இன்னொரு தாயாய்

 இருண்ட மேகம் மழையின் வாசத்தில்/
இறுக்க முகம் இளகிய பாசத்தில்/
சொற்களில் கண்டிப்பும் கண்களில் கனிவுமாய்/
காத்திடும் இன்னொரு தாயே அப்பா/

ஒழுக்கமும் அறிவும் வாழ்வின் மொழிகளாம்/
அழகாகச் சொல்லியே அனுபவமாவார் வாழ்வினில்/
அருகிலிருந்தால் தொல்லையே புத்தி நினைக்கும்/
தொலைவானால் விழிகள் ஏங்குமே அருகாமைக்கே/

பிஞ்சுப் பருவத்தில் இணைத்திட்ட கரங்கள்/
தஞ்சமாகித் தொடரும் தன் ஆயுளுக்கே/
அறியாத வயதில் பதித்திடும் தடங்களில்/
உரியாதே அன்பின் நிழல் உயிர்க்குமே/

ஜன்ஸி கபூர்  




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!