புத்தம்புது பூமி வேண்டும் அழகாக/ சித்தம் மகிழும் வாழ்வும் நமதாக/ சத்தம் கலக்காத காற்றும் சுவாசமாக/ நித்தம் நலம் பேணும் நிலமாக/ மாசு அற்ற இயற்கையே வரமாக/ காசு தேடா வாழ்க்கையே இருப்பாக/ பசுமை தெளிக்கும் தருக்களே அரணாக/ ஆசு தேடா மக்களே உயிர்ப்பாக/ பூக்கள் வாசம் மனங்களின் நேசமாக/ காக்கும் கரங்கள் இறையோன் ஆசியாக/ தாக்கும் தொற்றுக்கள் நீக்கும் மருந்தாக/ பாக்கள் தளிர்க்கும் தமிழ்மொழி விருப்பாக / மாற்றிடும் நம்மைச் சுமக்கும் தேசம்/ ஆற்றிடும் இன்னல் ரணங்களைத் தேகம்/ மறைத்திடும் பொங்கும் வன்முறை மோகம்/ குறைந்திடும் வாழ்வில் வறுமைத் தாக்கம்