சித்தம் மகிழும் வாழ்வும் நமதாக/
சத்தம் கலக்காத காற்றும் சுவாசமாக/
நித்தம் நலம் பேணும் நிலமாக/
மாசு அற்ற இயற்கையே வரமாக/
காசு தேடா வாழ்க்கையே இருப்பாக/
பசுமை தெளிக்கும் தருக்களே அரணாக/
ஆசு தேடா மக்களே உயிர்ப்பாக/
பூக்கள் வாசம் மனங்களின் நேசமாக/
காக்கும் கரங்கள் இறையோன் ஆசியாக/
தாக்கும் தொற்றுக்கள் நீக்கும் மருந்தாக/
பாக்கள் தளிர்க்கும் தமிழ்மொழி விருப்பாக /
மாற்றிடும் நம்மைச் சுமக்கும் தேசம்/
ஆற்றிடும் இன்னல் ரணங்களைத் தேகம்/
மறைத்திடும் பொங்கும் வன்முறை மோகம்/
குறைந்திடும் வாழ்வில் வறுமைத் தாக்கம்
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!