About Me

2020/08/15

கருப்பு காந்தி

பாரத தேசத்தின் நேசகர் ஆனவர்/

தாரக மந்திரமாக கல்லாமை நீக்கியவர்/

மனிதருள் மாணிக்கம் கனிவின் வித்தகர்/

தனித்திருந்து கடமைகளை கருத்தோடு செய்தவர்/

 

பட்டங்கள் பெறாமலே சட்டங்கள் சொன்னவர்/

திட்டங்கள் தீட்டியே மனங்களை வென்றவர்/

குடும்பமாக தேசமே உயிர்க்கவே   உரமாகியவர்/

தடுமாறும் ஏழைக்கே தாய்மையில் நின்றவர்/


விரிந்த தேசமே விரும்பிட நின்றார்/

விருட்சமாகி கல்விக்குள் சேவைகள் புரிந்தார்/

சமத்துவம் பேணி சார்ந்திட்டார் அன்பில்/

சரித்திர பூமியை சொர்க்கமாகவே மாற்றினார்/


ஜன்ஸி கபூர் 

காணாமல் போன கண்ணீர்

 


சுதந்திர வாழ்க்கையின் சொப்பனங்கள் தொலைய/

சுற்றித் திரிகின்றனர் நாடோடிகளாக தரிப்பிடமின்றி/

பிஞ்சுகளின் கண்களுக்குள் விடியல் ஊற்றிட/

கெஞ்சுகின்றதே ஏழ்மையும்தான் தாய்மையின் துடிப்பினாலே/

 

போராட்ட வாழ்வினில் பொசுங்குதே ஏக்கங்கள்/

வேரோடும் கனவுதனை அறுத்திடுதே வறுமையும்/

பாராளும் மன்னரெல்லாம் கையேந்தும் அவலநிலை/

பசி தணிக்கும் காத்திருப்பில் நிமிடங்கள்/


வாழ்ந்திட ஆயிரம் வழி காத்திருக்கிறதே/

வாசலெல்லாம் நிழல் பதிக்கும் வாழ்வெதற்கு/

சோர்வை உதறிவிடு சோகங்களும் தூரமாகும்/

தேம்பியழும் கண்ணீருக்கும் முடிவிருக்கும் நிரந்தரமாய்/


இரந்திடும் கரங்களுக்குள் வலிமையிருக்கு வாழ்வதற்காக/

வந்த துன்பம் தீர்வதற்கே துணிவுமுனக்கிருக்கே/

காணாமல் போகும் கண்ணீரும் உன்னிடமிருந்தே/

களமிறங்கு  களிப்புடன் வசந்தமே உன்னிடமே/


ஜன்ஸி கபூர்  

 

திகழுமே

திகழுமே அறிவும் பேரொளி சிந்தி

மகிழுமே மனதும்  அறியாமை அகற்றி

அகிலமும் வியக்குமே உந்தன் அறிவில்

கற்றிடும் கல்வியே இமயமென உயர்த்தும்

சுற்றிடும் பூமிக்குள்ளும் அறியாமை களைந்தே

பற்றிடுக பகுத்தறிவும் வாழ்வினை மாற்றுமே

ஜன்ஸி கபூர் - 04.08.2020



2020/08/14

விட்டோடுதல் தகுமோ

 


விழிகளின் கனவெல்லாம் விழிநீரில் கரைந்திடுமோ

தழுவிடத் துணையுமில்லை தணிந்திடாத கோபத்தால்

வழக்கின் பிடிக்குள் அழகான இல்லறம்

வழிகின்ற சோகம்தான் எதிர்காலத் துடிப்பாகுமோ


கருத்தோடு இசைந்தே வாழ்ந்திட்ட வாழ்வும்

உருச் சிதைந்ததோ மனமும் புரிந்துணர்வின்மையால்

எதிர்த் துருவமாக சிறகடிக்கும் அன்பே

அருகமர்ந்து பேசினாலே மிரண்டோடும் பிணக்கெல்லாம்

 

விட்டுக்கொடுத்தாலே விலகிடும் முரண்பாடெல்லாம்

தட்டிக் கொடுத்தாலும் தாம்பத்தியம் மகிழ்ந்திடும்

கட்டிய மாங்கல்யம் தொட்டணைத்த குழந்தைகளை

விட்டோடுதல் தகுமோ பெற்றவர்கள் துணையின்றி


ஜன்ஸி கபூர்