About Me

2020/08/15

காணாமல் போன கண்ணீர்

 


சுதந்திர வாழ்க்கையின் சொப்பனங்கள் தொலைய/

சுற்றித் திரிகின்றனர் நாடோடிகளாக தரிப்பிடமின்றி/

பிஞ்சுகளின் கண்களுக்குள் விடியல் ஊற்றிட/

கெஞ்சுகின்றதே ஏழ்மையும்தான் தாய்மையின் துடிப்பினாலே/

 

போராட்ட வாழ்வினில் பொசுங்குதே ஏக்கங்கள்/

வேரோடும் கனவுதனை அறுத்திடுதே வறுமையும்/

பாராளும் மன்னரெல்லாம் கையேந்தும் அவலநிலை/

பசி தணிக்கும் காத்திருப்பில் நிமிடங்கள்/


வாழ்ந்திட ஆயிரம் வழி காத்திருக்கிறதே/

வாசலெல்லாம் நிழல் பதிக்கும் வாழ்வெதற்கு/

சோர்வை உதறிவிடு சோகங்களும் தூரமாகும்/

தேம்பியழும் கண்ணீருக்கும் முடிவிருக்கும் நிரந்தரமாய்/


இரந்திடும் கரங்களுக்குள் வலிமையிருக்கு வாழ்வதற்காக/

வந்த துன்பம் தீர்வதற்கே துணிவுமுனக்கிருக்கே/

காணாமல் போகும் கண்ணீரும் உன்னிடமிருந்தே/

களமிறங்கு  களிப்புடன் வசந்தமே உன்னிடமே/


ஜன்ஸி கபூர்  

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!