About Me

2020/09/03

நீதியும் தீர்ப்பும்

திக்கின்ற ஏழ்மைக் கனவுகள்/

நியாயமின்றி மகண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின்/ 

எண்ணத்திலும் புண்ணாகும் சட்டத்துள் துளையிருந்தால்/

அநீதிகள் ஆளப்படுகையில் நீதியும் கூண்டுக்குள்/

அதிகார வதையினில் அனலுக்குள் நேயமே/  


நீதிமன்றம் மிறைந்திடும் கல்லறைக்குள் கலிகாலமே/

சூழ்நிலைச் சாட்சிகள் சூது பரப்புகையில்/

ஆழ்நிலைச் சிந்தனைகள் நெறிக்குள் தெறித்திடுமே/


கைவிலங்குகள் அரணாகும் நொடிப் பொழுதினில்/

நம்பிக்கையும் அறுந்திட விடுதலையாவார் கணத்தினிலே/

மனிதத் தீர்ப்புக்கள் வேடத்தினால் வெளிறுகையில்/

மனசாட்சியாக ஒலித்திடுமே இறை தீர்ப்புமே/


ஜன்ஸி கபூர்

நாட்டுப்புறக் கலை

கலைகளே செதுக்கிடும் பண்பாட்டின் உணர்ச்சிகளை/ 

உணர்ச்சிகளை வடித்திடுவார் ஆடல் பாடல்களாய்/

பாடல்களாய் ஒலித்திடுமே சமுதாயத்தின் வாழ்வியல்/

வாழ்வியலின் அழகியலே நாட்டுப்புறக் கலைகளே/


ஜன்ஸி கபூர் - 03.09.2020




மழைக் காலக் காதல் ஒன்று

தரையில் நொருங்குகின்ற மழைப் பூக்களும்/

கரைகின்றதே மேனியில் உறவின் ஏக்கத்தினில்/

திரை போடா மோகத்தின் சிலிர்ப்பினில்/

வருடுகின்றனவே கரங்களும் இடைத் தளிரை/


விரைகின்ற தென்றலும் அசைக்கின்ற குடைதனில்/

வரைகின்றதே நீரும் வசந்தத்தின் ஈர்ப்பினை/

மயங்கிடும் உள்ளங்களின் மகிழ்வுப் பயணமதில்/

தயங்கிடுமோ கால்களும் தனிமைக்குள் நனைந்திடவே/


விழி அழகின் விருந்தோம்பலாய்க் காதலை/

சுவைக்கின்றதே அன்றில்களின் ஆனந்த இதயங்கள்/


ஜன்ஸி கபூர் - 03.09.2020



தாய்மை

அன்பிற்கும் உயிரூட்டுகின்ற அற்புத துடிப்பிது

துடிப்பிது படர்ந்தே துணையாகி வழிகாட்டுதே

வழிகாட்டுதே பாசமாக எதிர்காலமும் சிறந்திடவே

சிறந்திடவே எமக்குள் பாதைகளை வகுத்தாரே

வகுத்தாரே ஒழுக்க விழுமியத்தின் மரபுகளை

மரபுகளைப் பேணியே மாண்புகளைக் காத்திடவே

காத்திடவே வேண்டுமே அகிலமும் போற்றவே

போற்றவே வாழ்கின்றோம் அன்னைக் ஈடேது

ஈடேது வையகத்தினில் தாய்மை அன்பிற்கும்


ஜன்ஸி கபூர்  - 03.08.2020