About Me

2020/09/05

நிலாச்சோறு

 அலைகள் பூக்கும்

நுரைகள் சிரிக்கும்

மகிழ்ச்சி


அவனும் அவளும்

ரசித்தே நடந்திடும் 

பொழுது


கண்கள் சிரிக்கும்

கனவுகள் ரசிக்கும்

ஏக்கம்;


எண்ணம் ஏங்கும்

இதயம் துடிக்கும்

தயக்கம்


கரங்கள் இணையும்

உறவும் மலரும்

காதல்



ஜன்ஸி கபூர் - 04.09.20


தொடர்கவிதை

 மகிழ்ந்திடும் மலர்களின் இதழ்களில் பனித்துளிகள்

மொய்த்திடுதே பருக்களாக பருவத்தில் மலர்களோ

தென்றலும் வருடுகையில் வெட்கத்தில் சிவந்திடும் 

அழகினை ரசிக்கையில்  மனதுக்குள் பரவசமே


ஜன்ஸி கபூர் 

2020/09/04

அந்தாதிக் கவிதை

 உயிரில் கலந்து உதிரத்தில் செதுக்கி/

செதுக்கி எடுத்தாரே அன்னையும் அன்பாலே/

அன்பாலே மனங்களை ஆள்கின்றார் நிதமும்/

நிதமும் நினைவுகளில்  வாழ்கின்ற உறவே/

உறவே உயர்வாகும் தாய்மையின் நிழலிலே/

நிழலிலே ஒதுங்குகையில் துயரமெல்லாம் இன்பமே/

இன்பமே இதயத்தில் இணைந்திருக்கின்ற வாழ்விலே/

வாழ்விலே கண்டெடுத்த அன்பின் சொர்க்கமே/

சொர்க்கமே என்பேனே தாயின் மடியும்/

மடியும் துடைத்திடும் எந்தன் துன்பத்தை/


ஜன்ஸி கபூர் 

அனுபவப் பாடம்

வகுப்பறையே வரம்தானே ஆளுமைகள் சிறந்திடவே/ 

வாழ்க்கையின் அனுபவங்களை பாடங்களாய் கற்கையிலே/

வெற்றியின் வழியினில் சாதனைகள் நமதாகும்/

கற்கண்டாய் திறமைகளும் காண்பவரைக் கவர்ந்திடுமே/

கல்வியினால் பெற்றிடும் நடத்தை மாற்றங்களே/

சிறந்த மனிதர்களை சமூகத்தினில் உருவாக்கும்/

ஜன்ஸி கபூர்