About Me

2020/09/29

அற்புத சரித்திரம்

 

அறிவியல் கண்டெடுத்த அற்புத சரித்திரம்/
அன்பால் ஆண்ட தேசத்தின் மகுடம்/

விழிகளின் கனவால் வாழ்வையே அர்த்தமாக்கியவர்/
விரலிடுக்கால் விஞ்ஞானத்தையே அகிலத்தில் வித்திட்டவர்/

மதம் கடந்த மாண்பான மனிதாபிமானம்/
மகுடம் சூட்டியதே தேசத்தின் சிம்மாசனமாக/

இராமேஸ்வரக் காற்றிலே உருக்கண்ட தேகம்/
இளம் இதயங்களை வருடியதே கனாக்களாக/

அக்கினிச் சிறகினில் உயிர்த்த அழகியல்/
அகிலத்தின் வித்தெனவேப் படர்ந்தது புகழினில்/

அணைந்திடாத தீபமென எரிகின்ற சோதியவர்/
இணையில்லாக் கணிதத்தின் வித்தகர் தானவர்/

ஏவுகணை நாயகனை ஏந்துகின்ற வரலாறு/
மறந்திடுமோ காலங்கள் பல உருண்டாலும்/

ஜன்ஸி கபூர் - 16.10.2020
-------------------------------------------------------

கூட்டுக்குடும்பம் உறவுகளின் பலமே/

கூட்டுமே அனுபவங்களை வாழ்வினில்/

ஜன்ஸி கபூர் - 29.09.20




 









2020/09/28

தாயன்பு

 


உதிரத்தால் நெய்த அன்பின் வருடல்/

உறவாக முகிழ்த்ததே அன்னையின் வடிவில்/

அகிலத்தில் உண்டோ அன்னைக்கு இணையாக/

அரவணைத்தால் கழன்றோடுமே உள்ளத்தின் வலிகள்/  

தன் நிழலினைப் போர்வையாக்கும் பாசத்தில்/

எண்ணமும் நனையுமே மகிழ்வினை ஊற்றியே/


ஜன்ஸி கபூர் - 28.09.20



 


நினைக்காத நேரமில்லை

 

மனதை வருடுகின்ற உன் நினைவில்/

மயங்கிக் கிடக்கிறேன் தேகம் சிலிர்க்கவே/

கனவும் விரிக்கின்ற உன் வதனமதை/

நினைவுக்குள் ஏந்தித் துடிக்கின்றேன் தினமும்/


அன்புச் சாறும் பிழிந்தே நனைக்கும்/

உன் புன்னகைக்குள் கரைகிறேனே காதலில்/

நீ வீசுகின்ற பார்வைத் தென்றல்/

எனைத் தழுவுகையில் சுவாசமே நீயாக/


மறக்கின்றேன் என்னையே நறவுச் சிற்பமே/

அழியாத நினைவுக் கலவைக்குள் வார்க்கின்ற/

அழகு தேவதையே உந்தன் மௌனமும்/

இம்சிக்கிறதே இதயத்தினை சுந்தர வலியுடனே/


நீ உதிர்க்கின்ற சுவடுகள் பூக்கின்றதே/

நீளுகின்ற நம் அன்பினை ரசித்தே/

நினைவுகளும் முக்காடிடுமோ காலத் திரையில்/

அணைக்கக் காத்திருக்கிறேன் உனைச் சூடவே/


என்னுயிரே உனை நினைக்காத நேரமில்லை/

கண்பூத்துக் காத்திருக்கிறேன் நீயும் வரும்வரை/


ஜன்ஸி கபூர்  








------------------------------------------------------------------------------------------------------------

2. தன்முனைக் கவிதை
முயற்சி
------------
முயற்சிக்கின்ற ஒவ்வொரு நொடியும்//
இலக்கும் நெருங்குகின்றதே// 
துணிவும் தன்னம்பிக்கையும்//
வெற்றியாக மாறுகின்றதே//

ஜன்ஸி கபூர் -  30.09.20

------------------------------------------------------------




கலப்படம்

 கலப்படம்

தந்திரம் கொண்டோர் தரிக்கின்றனர் கலப்படத்தில்/

தரத்தினை மாற்றியே ஆள்கின்றனர் சுயநலத்தில்/

நோய்களும் சாயுமே தரமற்ற பொருட்களில்/

நோவினையும் தந்திடுமே ஏமாற்று வியாபாரம்/

நுகர்வோரைப் பாதிப்போர் அணியட்டுமே கைவிலங்கை/

நுகர்ந்திடும் நமக்கும் வேண்டுமே விழிப்புணர்வும்/

ஜன்ஸி கபூர்