About Me

2020/10/16

Groups






 

அழகான குடும்பம்

 அழகான குடும்பம்

அன்பை உணர்த்திடும்  அருமையான குடும்பம்/

இன்பத்திற்கும் குறைவில்லை இதயமெனும் கூட்டிலே/

அழகான குடும்பம் இறைவனின் வரமே/

அணைத்திடும் சிறகினுள் ஆனந்த உலகமே/

அனுபவமும் ஏற்றிடும் பண்பாட்டுப் பல்கலைக்கழகமே/



 ஆறாது சினம்
 
பசுமை கரைத்தே
     பகைமை வளர்த்த/
பச்சோந்தி மானிடன்
     பற்றிய தீயிது/

கொடுமைகளின் விளைவினாலே
     கொட்டுகின்ற அனலும்/
கொழுந்து விட்டெரிந்தே
     கொல்கின்றதே சுவாசத்தை/

கொல்லும் புகை
     கொண்டலை உலர்த்தி/
கொட்டாதே மழையும்
     கொட்டுகின்றதே நெருப்பும்/

அகிலத்தின் உயிர்ப்பினை
     அறுக்கின்ற வன்முறைகள்/
அடங்கிடாத போது
     அணைந்திடுமோ சினமும்/

தெரிந்தே இரணமாக்கி
     தென்றலுக்குள் மாசேற்றித்/
தெளிக்கின்ற அவலத்தால்
     தெறிக்கின்றதே வஞ்சினம்/


 தன்னையே செதுக்கிடு
 
சூளும் தடைகளை 
 சூட்சுமமாகத் தகர்த்தே/

சூட்டிட வேண்டுமே 
 சுகமான நலங்களை/

தக்கபடி வாழ்ந்திடவே 
 தன்னையே செதுக்கிடு/ 

தன்னம்பிக்கைப் பலத்தோடு 
 தரணியில் சிறந்திடு/ 

முயற்சியும் வென்றிடும் 
 முழுமூச்சாய் செயலாற்றிடு/

 


 
இல்லறவியல்- அதிகாரம்7.மக்கட்பேறு.
குறள்:66.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்  
மழலைச்சொல் கேளா தவர்
 
மங்கலச் சிறப்பின் பயன் நன்மக்களே/
மாண்பான வாழ்வும் வந்தணையும் நற்பேறாகி/
மகிழ்வினை யூட்டுகின்ற பிள்ளைகள் இல்லாதோர்க்கு/
மனக்குறையே என்றென்றும் தம் வாழ்நாளிலே/

மழலை யின்பம் அறியாதோரே என்றும்/
மயங்குவார் யாழினை மீட்டிடும் இசைதனில்/
மனதின் கலியினைக் கரைத்திடும் அமிர்தமே/
மக்கட் செல்வமாகி நிறைத்திடுமே வாழ்வினை/

பஞ்சு மேனியினைத் தழுவி அணைத்திடல்/
நெஞ்சில் வார்த்திடுமே இனிமையெனும் அன்பினை/



 வீணாகும் விளைச்சல்
 
வந்தனை செய்தோம் 
     உழவினை நாமே/
நிந்திக்கின்றதே காலமும் 
     விற்பனை யின்றி/

தேகம் வருத்தி 
     விளைந்த முத்துக்கள்/
தேங்கின தொற்றும் 
     தீட்டிய ஊரடங்கால்/

கட்டிய மூட்டைக்குள் 
     கருக்கட்டியதே கண்ணீரும்/
எட்டியும் பார்த்தன  
     முளைத்திடும் பயிர்களாகி/

விளைந்ததைக் காத்திடா 
     ஏழ்மையும் இங்கே/
விதியா சதியா  
     பாழானதே முயற்சி/

இன்னல் சிந்திய 
     இடைவிடாத உழைப்பு/
இங்கே வீணான 
     விளைச்சலுக்கான உரமோ/

ஜன்ஸி கபூர் 











அம்மாவின் முந்தானை

 


அன்பை அள்ளிச் சொருகி அணைத்திடும்/

அம்மாவின் முந்தானை எனக்குப் பஞ்சனையே/

கோர்த்து நிற்கின்ற வியர்வைத் துளியினைப்/

பாசத்தில் ஒற்றியெடுக்கும் அன்பின் உருவது/


உழுதிடும் வெயில்ப் பூக்களும் உருக்கும் மேனிக்கே/

நிழலிடும் உயிர்க் குடைப் பந்தமது/

முந்தானைச் சிறகும் வருடும் காப்பினை/

எந்நாளும் போர்த்துகின்றேன் என்றன் வாழ்வினில்/


ஜன்ஸி கபூர் - 16.10.2020




2020/10/12

செக்கச் சிவந்தவளே

 செக்கச் சிவந்தவளே செதுக்கிய பொற்சிலையே/

உன்தன் விழியாலே உசுரதான் அணைக்கிறியே

செவந்தவுன் உதட்டில சிதறுறநீ சிரிப்பத்தான்/

அள்ளிச் சொருகிறேன் ஆச மனசுக்குள்ள/


வெக்கத்தில செவக்குறே வெள்ள மனசுக்காரி/

நெறைஞ்சிருக்குறே நெனைப்புல நெஞ்சோரம் அணைக்கலாமா/

சிணுங்குற கொலுசுக்குள்ள சிந்துறே எசயத்தான்/

அணைக்கிறேன் கனவுல அருகில வந்துடடி/

கண்டாங்கி சேலயில கண்டபடி சுத்துற/

கண்ணுக்குள்ள மொய்க்கிறே காவலுக்கு வாறேன்டி/


ஜன்ஸி கபூர் - 25.10.2020

 

  •