About Me

2020/11/01

குடும்பம் ஒரு கதம்பம்


விழுதுகளாய் உறவுகள்  தாங்கிடும் குடும்பமும்/

பூத்திடும் கதம்பமாக பூரித்திடும் வாழ்வும்/

விரிகின்ற பொழுதெல்லாம் விதைக்கின்ற அன்பினால்/

கரைந்தோடும் சலிப்பும் கனிந்திடும் உணர்வுகளும்/


பெற்றிடும் இன்பம் பற்றிடும் மனதை/

பெருங்கிளையாகத் தாங்கிடும் பெரும் அனுபவங்களும்/

பெரும் பாக்கியமே பெரியோர் அரவணைப்பும்/

பொருந்தி வாழ்தலில் சுற்றங்களும் வாழ்த்தும்/


இடர்கள் தோன்றுகையில இதமாக வருடிடும்/

பாச வெளிதனில் படர்தல் சுகமே/


ஜன்ஸி கபூர் - 05.11.2020

 

கவிதைச்சாரல் கவிதைகள் 2

 1.











  விவாகரத்தின் விபரீதம்

 

இல்லறப் பயணத்தில் இணைந்திடும் முரண்களுடன்/

இசைகின்ற மனங்களும் இளைப்பாறுகின்றன விவாகரத்தில்/

இனித்திடாப் பிரிவு இன்னலே பிள்ளைகளுக்கு/

இவ்வுலக வாழ்வும் இரணத்தின் அடைக்கலமே/


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை/

குறைகளின் உருத்துலக்கம் குறைத்திடும் நிம்மதியை/

ஆளுக்கொரு பக்கமாக அசைத்திடும் கயிறோ/

அற்புத மணவாழ்வின் அழகிய மாங்கல்யம்/

 


 புன்னகை பூத்தே புத்துயிர் தந்தாயே

புன்னகை பூத்தே  புத்துயிர் தந்தாயே/

புதுவாழ்வின் நாதமாக  புகுந்தாயே உணர்வில்/

புயலாய் வறுமையும்  தீண்டுகின்ற வாழ்வினில்/

பூத்தாய் மலராய்  புதுவசந்தம் மனதினிலே/


இல்லறச் சோலையில்  இனிதாகப் பூத்தவளே/

இதயத் துடிப்பினிலே  இதமாகக் கலந்தவளே/

பேசுகின்ற வார்த்தைகளில் பூசுகின்றதே அழகும்/

பூகம்பம் சூழ்கையிலே அணைக்கின்றாய் அன்பினால்/


இறைவன் தந்த  இனிய வரமே/

இனிக்கின்றதே பொழுதுகளும்  இன்முகம் கண்டாலே/



 நிழலாடும் நினைவுகள்
 
நிழலாடும் நினைவுகள் உதிர்கின்றன ஒவ்வொன்றாக/
நிசத்தின் உயிர்ப்பாய் இன்றும் அலைகின்றன/
பள்ளி வாழ்வின் குறும்பின் வருடல்கள்/
தோழமைகளின் சிரிப்புக்குள் சிறைபடுகின்றன அடிக்கடி/

இரவின் தனிமைக்குள் எனை வீழ்த்தி/
இரசித்த நிலவின் இரம்மிய வருடலும்/
இதமாக வருடும் தென்றலின் அணைப்பும்/
இன்றும் மறந்திடா அழகிய உயிர்ப்புக்கள்/

ஜன்ஸி கபூர்  

 


 
 
 
 

கஜலகளின் ஊர்வலம்


 

 
 


1. நீ மழைத்துளியா
  உன்னைத் தேடினேன்
  என் முகவரி அழிந்துவிட்டது

2. தீயில் 
  எரிந்து கொண்டிருக்கின்றேன்
  சாம்பர்மேட்டில் 
  பூக்கின்றன உன்னினைவுகள்

3. காணாமல்போன என்னை
  காட்டிக்கொடுக்கின்றன 
  உன் கண்கள்

4. உன்னை 
  மௌனமாக வாசிக்கின்றேன்
  திரை விரிக்கின்றது 
  கண்ணீர்

5. தீபமேந்தியவளாக நிற்கின்றாய்
  நானோ 
  கரிந்த சிறகுகளுடன்
  உன்னைச் சுற்றுகின்றேன்

6. நாம் மயக்கத்தில் கிடக்கின்றோம்
  சுவாசமாகக் கிடைக்கின்றது
  காதல்

7. என்னை உன்னில் ஒளித்துவிட்டேன்
  பிரிவே
  இனி என்ன செய்வாய்

8. என்னைக் கொஞ்சம் அழவிடு
  கவிதைகள் 
  எனக்குள் உயிர்க்கட்டும்

9. என் கண்ணீரைச் சேமிக்கின்றாய்
  உன் புன்னகையை ஈரப்படுத்த

10 நான் 
  உறங்க வேண்டும்
  கனவுகளால் 
  என்னைப் போர்த்திவிடு

ஜன்ஸி கபூர் - 12.11.2020

Kesavadhas
 
ஜன்ஸி கபூர் அட்டஹாஸமான கஜலகளின் ஊர்வலம்!
ஒவ்வொரு கவிதையும் ஒரு வராகன்!
வாழ்த்துகள் கவிஞரே!
-----------------------------------------------------------------------------------
  


 


கவியுலகப் பூஞ்சோலை

கவியுலகப் பூஞ்சோலையும்

களித்ததேயுங்கள் வழிகாட்டில்

முத்துக் கவிதனை நாமும் பதித்திட

முற்றமது தந்தீர்கள்

முகநூல் கவியுறவே

தமிழுக்குத் தாங்களாற்றும் சேவைதனை

தரணியும் பாராட்டுமே

இலக்கிய வேட்கையினை

இதமாகத் தீர்த்திட

இடமளிக்கும் கவிவள்ளலே

சீரும் சிறப்பும் பெற்று

சிறப்பாக வாழ்ந்திட வாழ்த்துக்கள்


ஜன்ஸி கபூர் - 01.10.2020



------------------------------------------------------------------