About Me

2020/11/01

கவிதைச்சாரல் கவிதைகள் 2

 1.











  விவாகரத்தின் விபரீதம்

 

இல்லறப் பயணத்தில் இணைந்திடும் முரண்களுடன்/

இசைகின்ற மனங்களும் இளைப்பாறுகின்றன விவாகரத்தில்/

இனித்திடாப் பிரிவு இன்னலே பிள்ளைகளுக்கு/

இவ்வுலக வாழ்வும் இரணத்தின் அடைக்கலமே/


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை/

குறைகளின் உருத்துலக்கம் குறைத்திடும் நிம்மதியை/

ஆளுக்கொரு பக்கமாக அசைத்திடும் கயிறோ/

அற்புத மணவாழ்வின் அழகிய மாங்கல்யம்/

 


 புன்னகை பூத்தே புத்துயிர் தந்தாயே

புன்னகை பூத்தே  புத்துயிர் தந்தாயே/

புதுவாழ்வின் நாதமாக  புகுந்தாயே உணர்வில்/

புயலாய் வறுமையும்  தீண்டுகின்ற வாழ்வினில்/

பூத்தாய் மலராய்  புதுவசந்தம் மனதினிலே/


இல்லறச் சோலையில்  இனிதாகப் பூத்தவளே/

இதயத் துடிப்பினிலே  இதமாகக் கலந்தவளே/

பேசுகின்ற வார்த்தைகளில் பூசுகின்றதே அழகும்/

பூகம்பம் சூழ்கையிலே அணைக்கின்றாய் அன்பினால்/


இறைவன் தந்த  இனிய வரமே/

இனிக்கின்றதே பொழுதுகளும்  இன்முகம் கண்டாலே/



 நிழலாடும் நினைவுகள்
 
நிழலாடும் நினைவுகள் உதிர்கின்றன ஒவ்வொன்றாக/
நிசத்தின் உயிர்ப்பாய் இன்றும் அலைகின்றன/
பள்ளி வாழ்வின் குறும்பின் வருடல்கள்/
தோழமைகளின் சிரிப்புக்குள் சிறைபடுகின்றன அடிக்கடி/

இரவின் தனிமைக்குள் எனை வீழ்த்தி/
இரசித்த நிலவின் இரம்மிய வருடலும்/
இதமாக வருடும் தென்றலின் அணைப்பும்/
இன்றும் மறந்திடா அழகிய உயிர்ப்புக்கள்/

ஜன்ஸி கபூர்  

 


 
 
 
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!